15 வயது சிறுமியாக நடித்து, பாடசாலை மாணவியாக இணைந்த 29 வயது பெண் கைது

Published By: Sethu

27 Jan, 2023 | 10:04 AM
image

15 வயது சிறுமியாக நடித்து, அமெரிக்காவிலுள்ள பாடசாலையொன்றில் மாணவியாக இணைந்த 29 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹையேஜியோங் ஷின் எனும் இப்பெண், நியூ ஜேர்ஸி மாநிலத்தின் நியூ புருன்ஸ்விக் நகரிலுள்ள பாடசாலையில் மாணவியாக இணைந்தார். 

15 வயது மாணவியாக தன்னைக் காட்டிக் கொண்ட அவர், போலி பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

4 தினங்கள் அவர் பாடசாலைக்கு சமுகமளித்தார். எனினும், சட்டபூர்வ பாதுகாவலர் தொடர்பான விபரங்களில் தெளிவின்மை இருந்ததால் அவர் மீது பாடசாலை நிர்வாகிகள் சந்தேகம் கொண்டிருந்தனர்.

இந்நிலையில்,  பாடசாலை உத்தியோகத்தர்களுக்கு அப்பெண்ணின் உண்மையான வயது தெரியந்தது. இது தொடர்பாக பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது,

சிறுமியாக நடித்து, பாடசாலை மாணவியாக இணைவதற்காக போலி பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்பெண் ஏன் இவ்வாறு செய்தார் என்பது தெரியவில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்