வருடத்தின் ஐசிசி வளர்ந்துவரும் அதிசிறந்த வீரர் ஜென்சன், அதிசிறந்த வீராங்கனை ரேணுகா சிங்

Published By: Vishnu

26 Jan, 2023 | 10:07 PM
image

(என்.வீ.ஏ.)

2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி வளர்ந்துவரும் அதிசிறந்த வீரராக தென் ஆபிரிக்காவின் மார்க்கோ ஜென்சனும் ஐசிசி வளர்ந்துவரும் அதிசிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ரேனுகா சிங்கும் தெரிவாகியுள்ளனர்.

தென் ஆபிரிக்காவின் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 2021ஆம் ஆண்டு அறிமுகமான மார்க்கொ ஜென்சன் (22 வயது) கடந்த வருடம் 8 டெஸ்ட் போட்டிகளில் 19.02 என்ற சராசரியுடன் 36 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அனுபவம் பெற்ற பந்துவீச்சாளர்களான தென் ஆபிரிக்காவின் கெகிசோ ரபாடா (47 விக்கெட்கள்), அவுஸ்திரேலியாவின் நெதன் லயன் (47 விக்கெட்கள்), இங்கிலாந்தின் ஜெக் லீச் (46 விக்கெட்கள்), ஸ்டுவர்ட் ப்றோட் (40 விக்கெட்கள்) ஆகியோருக்கு அடுத்ததாக 2022இல்  ஜென்சன்  5ஆம் இடத்தைப் பெறறார். 

அனுபவம் குறைந்தவர்களில் அவர் முதலிடம் வகிப்பதுடன் இலங்கையின் ப்ரபாத் ஜயசூரிய (3 போட்டிகளில் 29 விக்கெட்கள்) 2ஆம் இடத்தில் உள்ளார். ஜயசூரிய ஒட்டுமொத்த நிலையில் 10ஆம் இடத்தை  வகிக்கிறார்.

வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றுள்ள ஜென்சன், துடுப்பாட்டத்திலும் சளைத்தவர் அல்லர். பின்வரிசை துடுப்பாட்ட வீரரான அவர், 16 இன்னிங்ஸ்களில் ஒரு அரைச் சதத்துடன் 277 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

ரேணுகா சிங்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் 2021ஆம் ஆண்டு அறிமுகமான ரேணுகா சிங், கடந்த வருடம் பந்துவீச்சில் அற்புதமாக செயற்பட்டார்.

இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் பல வெற்றிகளுக்கு ரேணுகா அடிகோலியதுடன் மொத்தமாக 40 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் காரணமாகவே ஐசிசி வளர்ந்துவரும் வருடத்தின் அதிசிறந்த வீராங்கனையாக ரேணுகா தெரிவானார்.

கடந்த வருடம் 7 மகளிர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14.88 என்ற சராசரியுடன் 18 விக்கெட்களையும் 22 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 23.95 என்ற சராசரியுடன் 22 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

இது இவ்வாறிருக்க இணை உறுப்பு நாடுகளுக்கான ஐசிசி வளர்ந்து வரும் வீரருக்கான விருதை நமீபியா அணித் தலைவர் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸும் ஐசிசி வளர்ந்துவரும் வீராங்கனைக்கான விருதை ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஈஷா ஓஸாவும் வென்றெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட்; பிரிதொரு...

2023-03-24 13:46:54
news-image

ஆஸி. ஆரம்பத் துடுப்பாட்டத்திற்கு பஞ்சமில்லை :...

2023-03-24 09:21:18
news-image

டி.எஸ்.எஸ். - மஹாநாம - 17ஆவது...

2023-03-23 16:54:41
news-image

இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர்:...

2023-03-23 16:21:36
news-image

மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தை வாங்க கத்தார்...

2023-03-23 12:08:50
news-image

முவர்ஸ் கழக வெற்றியில் அசத்திய யாழ்....

2023-03-23 09:32:37
news-image

உலகக் கிண்ணத்தை வென்ற பின் ஆர்ஜென்டீனா...

2023-03-22 17:24:52
news-image

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மற்றொரு சவால்

2023-03-22 14:55:24
news-image

WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி :...

2023-03-22 11:40:58
news-image

விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறும்...

2023-03-22 09:40:29
news-image

தரங்க, டில்ஷான் துடுப்பாட்டத்தில் அசத்தல் :...

2023-03-21 17:16:15
news-image

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக...

2023-03-21 14:58:47