செய்மதிகளைவிட பூமியை நெருக்கமாக கடந்து செல்லவுள்ள விண்கல்: நாசா தெரிவிப்பு

Published By: Sethu

26 Jan, 2023 | 06:26 PM
image

ஒரு பஸ் அளவிலான விண்கல். இன்னும் சில மணித்தியாலங்களில் பூமியை சுமார் 3,600 கிலோமீற்றர்கள்; (2,200 மைல்கள்) தொலைவில் கடந்து செல்லவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 

பல செய்மதிகளைவிட இந்த விண்கல் பூமியை நெருங்கிச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், இவ்விண்கல் பூமியில் மோத வாய்ப்பில்லை என்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என நாசா தெரிவித்துள்ளது.

2023 BU (2023 பியூ) என இவ்விண்கல்லுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. 

ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள, உக்ரேனின் கிரைமியா பிராந்தியத்திலுள்ள அமெச்சூர் விண்வெளி அவதானிப்பாளரான கென்னடி போரிசோ என்பவரால் கடந்த வாரமே இவ்விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின், இந்த விண்கல்லின் சுற்றுவட்டப்பாதை குறித்து அறியப்பட்டது. 

இன்னும் கண்டுபிடிக்கப்படாத சிறிய அளவிலான பல விண்கற்கள் பூமிக்கு அருகில் இருப்பதை இது வெளிப்படுத்துகிறது.

இவ்விண்கல்லானது தென் அமெரிக்கக் கண்டத்தின் தென் முனையை அமெரிக்காவின் கிழக்குப் பிராந்திய நேரப்படி 26 ஆம் திகதி இரவு 7.27 மணிக்கு  (இலங்கை, இந்திய நேரப்படி 27 ஆம் திகதி வெள்ளி காலை 5.57 மணிக்கு, ஜிஎம்ரி நேரப்படி வெள்ளி அதிகாலை 00.27 மணிக்கு) 3,600 கிலோமீற்றர்கள் தொலைவில் நெருங்கிச் செல்லும்.

உலகின் சில செய்மதிகள் பூமியிலிருந்து 36,000 கிலோமீற்றர்கள் உயரத்திலும் பூமியை வலம் வருகின்றன. இச்செய்மதிகளுடன் ஒப்பிடும்போது மேற்படி விண்கல் சுமார் 10 மடங்கு நெருக்கமாக கடந்து செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்மதி சுற்றுப்பாதை - பச்சை; 2023 BU விண்கல் சுற்றுப்பாதை  எதிர்வுகூறல் - சிவப்பு; சந்திரனின் சுற்றுப்பாதை - வெள்ளை (Image: NASA) 

இந்த விண்கல் 3.5 முதல் 8.5 மீற்றர் (11.5 முதல் 28 அடி) நீளமானதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவிலான விண்கல் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்தால் அதன்  பெரும்பகுதி எரிந்துவிடும் என நாசா தெரிவித்துள்ளது.

பூமியின் ஈர்ப்புச் சக்தியானது இந்த விண்கல்லின் சுற்றுப்பாதையை மாற்றிவிடும் என நாசா தெரிவித்துள்ளது.

பூமிக்கு அருகில் வருவதற்கு முன் அதன் சுற்றுப்பாதையானது ஏறத்தாழ வட்டமாக இருக்கும். சூரியனை சுற்றிவருவதற்கு அது சுமார் 359 நாட்களை எடுத்துக்கொள்கிறது. 

ஆனால், பூமியை நெருங்கி வருவதால் புவியீர்ப்பு விசையினால் அதன் பயணப்பாதை நீள்வட்டமாக மாறிவிடும். பின்னர் அது 425 நாட்களுக்கு ஒரு தடவை பூமியை சுற்றிவரும் என நாசா தெரிவித்துள்ளது. (சேது)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பிரதமரோடு பானிபூரி உண்ட ஜப்பான்...

2023-03-22 17:25:44
news-image

மோடிக்கு எதிராக சுவரொட்டி : 6...

2023-03-22 15:45:06
news-image

சிரியாவின் அலேப்போ விமான நிலையம் மீது...

2023-03-22 14:08:01
news-image

பிரேஸில் அரச தொழில்களுக்கு 30% கறுப்பின...

2023-03-22 12:24:44
news-image

உக்ரேனுக்கு 15.6 பில்லியன் வழங்குகிறது ஐஎம்எவ்:...

2023-03-22 11:01:11
news-image

நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க...

2023-03-22 10:46:57
news-image

வாகனங்கள், உடைகளை மாற்றி அம்ரித்பால் சிங்...

2023-03-22 10:36:46
news-image

ஓரின சேர்க்கையாளர்களை சிறையிலடைக்கும் சட்டமூலத்துக்கு உகண்டா...

2023-03-22 09:43:06
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : பாகிஸ்தானிலும் இந்தியாவிலும்...

2023-03-22 08:56:00
news-image

மெக்ஸிக்கோவில் வானவேடிக்கை தயாரிக்கப்பட்ட வீட்டில் வெடிப்புச்...

2023-03-21 18:01:43
news-image

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு சீன...

2023-03-21 16:59:27
news-image

ஜப்பானிய பிரதமர் பூமியோ கிஷிடா உக்ரேனுக்கு...

2023-03-21 16:57:48