2022ஆம் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீராங்கனை நட்டாலி சிவர்; ஒருநாள் கிரிக்கெட் விருதையும் தனதாக்கினார்

Published By: Vishnu

26 Jan, 2023 | 10:08 PM
image

(என்.வீ.ஏ,)

சர்வதேச கிரிக்கெட் பேரவை விருதுகளில் 2022ஆம் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீராங்கனை உட்பட 2 பிரதான விருதுகளை இங்கிலாந்தின் சகலதுறை வீராங்கனை நட்டாலி சிவர் வென்றெடுத்தார்.

சர்வதேச கிரிக்கெட் விருதுகளுக்கு உரியவர்களை ஐசிசி இன்று வியாழக்கிழமை (26) வெளியிட்டது.

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் விராங்கனைக்கான ரஷேல் ஹேஹோ ஃப்ளின்ட் விருதை வென்றெடுத்த நட்டாலி சிவர், வருடத்தின் அதிசிறந்த ஐசிசி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கும் உரித்தானார்.

பாகிஸ்தானின் பாபர் அஸாமைப் போன்று மூன்று வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் பிரகாசித்ததன் மூலம் வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை நட்டாலி சிவர் வென்றெடுத்தார்.

2014இல் சாரா டெய்லர் இந்த விருதை வென்ற பின்னர் ஆங்கிலேய பெண் ஒருவர் இந்த விருதை வென்றெடுப்பது இதுவே முதல் தடவையாகும்.

மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் 2022ஆம் ஆண்டு வெற்றிநடை போட்ட இங்கிலாந்து அணியில் நிலையான வீராங்கனையாக இடம்பெறுவரும் நட்டாலி சிவர், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மகளிர் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மிகவும் அவசியமான வேளையில் அரைச் சதம் குவித்து அசத்தினார்.

அத்துடன் வருட மத்தியில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 169 ஓட்டங்களைக் குவித்தார்.

கடந்த வருடம் 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு சதம், ஒரு அரைச் சதம் உட்பட 242 ஓட்டங்களை மொத்தமாக பெற்ற அவரது சராசரி 121.00ஆக இருந்தது. அத்துடன் 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

16 மகளிர் சர்வதேச ஒருநாள் இன்னிங்ஸ்களில் 2 சதங்கள், 5 அரைச் சதங்கள் உட்பட 833 ஓட்டங்களைக் (சராசரி 59.50) குவித்த சிவர், 11 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

13 மகளிர் சர்வதேச இருபது 20 இன்னிங்ஸ்களில் 271 ஓட்டங்களைப் பெற்றார்.

நியூஸிலாந்தில் கடந்த வருடம் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண (50 ஒவர்) இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 357 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சார்பாக தனி ஒருவராக போராடிய நட்டாலி சிவர் 148 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். ஆனால், அப் போட்டியில் 71 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட்; பிரிதொரு...

2023-03-24 13:46:54
news-image

ஆஸி. ஆரம்பத் துடுப்பாட்டத்திற்கு பஞ்சமில்லை :...

2023-03-24 09:21:18
news-image

டி.எஸ்.எஸ். - மஹாநாம - 17ஆவது...

2023-03-23 16:54:41
news-image

இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர்:...

2023-03-23 16:21:36
news-image

மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தை வாங்க கத்தார்...

2023-03-23 12:08:50
news-image

முவர்ஸ் கழக வெற்றியில் அசத்திய யாழ்....

2023-03-23 09:32:37
news-image

உலகக் கிண்ணத்தை வென்ற பின் ஆர்ஜென்டீனா...

2023-03-22 17:24:52
news-image

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மற்றொரு சவால்

2023-03-22 14:55:24
news-image

WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி :...

2023-03-22 11:40:58
news-image

விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறும்...

2023-03-22 09:40:29
news-image

தரங்க, டில்ஷான் துடுப்பாட்டத்தில் அசத்தல் :...

2023-03-21 17:16:15
news-image

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக...

2023-03-21 14:58:47