விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 'சைந்தவ்'

Published By: Nanthini

26 Jan, 2023 | 05:54 PM
image

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகரான விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் தயாராகும் புதிய படத்துக்கு 'சைந்தவ்' என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான போஸ்டரும், படத்துக்கான பிரத்தியேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

'ஹிட்' திரைப்பட இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் 'சைந்தவ்' படத்தில் விக்டரி வெங்கடேஷுடன் 'பேட்ட' படத்தில் நடித்த பொலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

எஸ். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் சூழலில் படத்தின் டைட்டிலையும், படத்துக்கான காட்சித் துணுக்கையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். 

இதில் விக்டரி வெங்கடேஷ் தாடியுடன் கையில் துப்பாக்கி ஏந்தியபடி தோன்றுவதும்,  பின்னணியில் கார் வெடித்து சிதறுவதும்  ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. 

தெலுங்கின் முன்னணி நடிகர்களாக இருந்து பான் இந்திய நட்சத்திர அடையாளத்தை பெற்றிருக்கும் பிரபாஸ், ராம் சரண் தேஜா, ஜுனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் ஆகியோர்களின் பட்டியலில் விக்டரி வெங்கடேசும் இணைவாரா என்பது இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு தெரிய வரும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right