தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பொம்மை நாயகி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஷான் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பொம்மை நாயகி'. இதில் யோகி பாபுவுடன் ஹரிகிருஷ்ணன், சுபத்ரா, ஸ்ரீமதி, ஜி.எம். குமார், அருள் தாஸ், லிசி அண்டனி, எஸ்.எஸ். ஸ்டான்லி, ஜெயச்சந்திரன், 'ரொக்ஸ்டார்' ரமணியம்மாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆர்.அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். எளிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த முன்னோட்டத்தில் யோகி பாபு - சுபத்ரா தம்பதிகளுக்கு ஒரு பெண்பிள்ளை இருக்கிறாள். அவள் தான் உலகம் என யோகி பாபு வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்.
ஒரு புள்ளியில் அந்தப் பெண்பிள்ளை தொலைந்து போகிறாள். அவளைத் தேடி தந்தையான யோகி பாபுவின் பயணத்தையே வலியுடனும் சோகத்துடனும் இந்த படம் சொல்கிறது.
மேலும், காணாமல் போகும் பெண்பிள்ளைகள் குறித்து சமூகத்தின் பொறுப்பு என்ன என்பது போன்ற வினாவையும் எழுப்புகிறது. இதனால் 'பொம்மை நாயகி' படைப்புக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இதனிடையே இந்தத் திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் மூன்றாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM