(என்.வீ.ஏ.)
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2022ஆம் ஆண்டுக்கான விருதுகளில் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் இரண்டு விருதுளை வென்று பாராட்டைப் பெற்றுள்ளார்.
வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோர்பஸ் விருதை வென்றெடுத்த பாபர் அஸாம், வருடத்தின் அதி சிறந்த சர்வதேச ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதையும் தனதாக்கிக்கொண்டார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை தொடர்ச்சியான இரண்டாவது வருடமாக பாபர் அஸாம் வென்றெடுத்தது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.
2022ஆம் ஆண்டில் மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் அற்புதமாக பிரகாசித்ததன் மூலம் இந்த இரண்டு விருதுகளையும் பாபர் அஸாம் சொந்தமாக்கிக்கொண்டுள்ளார்.
கடந்த வருடம் மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 44 போட்டிகளில் விளையாடிய பாபர் அஸாம், 54.12 என்ற சராசரியுடன் 2,598 ஓட்டங்களைக் குவித்தார். அதில் 8 சதங்களும் 17 அரைச் சதங்களும் அடங்கின.
2022ஆம் ஆண்டில் பாபர் அஸாம் பல தனிப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியதுடன் ஒரே வருடத்தில் மூவகை கிரிக்கெட்களில் 2,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே ஒரு வீரர் என்ற கௌரவத்தைப் பெற்றார்.
9 டெஸ்ட் போட்டிகளில் 17 இன்னிங்ஸ்களில் 4 சதங்கள், 7 அரைச் சதங்கள் அடங்கலாக 1.184 ஓட்டங்களையும் (சராசரி 69.64) 9 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 சதங்கள், 5 அரைச் சதங்கள் அடங்கலாக 679 ஓட்டங்களையும் (சராசரி 84.87), 26 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சதம், 5 அரைச் சதங்கள் அடங்களாக 735 ஓட்டங்களையும் (சராசரி 31.95) பாபர் அஸாம் மொத்தமாக பெற்றார்.
டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அணி என்ற வகையில் பாகிஸ்தான் சாதிக்காதபோதிலும் பாபர் அஸாமின் துடுப்பிலிருந்து ஓட்டங்கள் குவிவதில் பஞ்சம் ஏற்படவில்லை.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடும் அழுத்தத்துக்கு மத்தியில் பாபர் அஸாம் குவித்த சதம் வருடத்தின் அதிசிறந்த இன்னிங்ஸ் துடுப்பாட்டமாக அமைந்தது எனலாம்.
அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 506 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை கிட்டத்தட்ட 6 ஆட்ட நேர பகுதிககளில் பாகிஸ்தான் 2ஆவது இன்னிங்ஸில் பெறவேண்டியிருந்தது. முதலிரண்டு விக்கெட்கள் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 21 ஓட்டங்களாக இருந்தது. ஆனால், துணிவை வரவழைத்துக்கொண்டு 10 மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடிய பாபர் அஸாம் 425 பந்துகளை எதிர்கொண்டு 196 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தானை தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.
இதனிடையே அப்துல்லா ஷபிக்குடன் 3ஆவது விக்கெட்டில் 228 ஓட்டங்களையும் மொஹமத் ரிஸ்வானுடன் 5ஆவது விக்கெட்டில் 115 ஓட்டங்களையும் பாபர் அஸாம் பகிர்ந்தார்.
நான்காவது இன்னிங்ஸில் தனி நபருக்கான அதிக ஓட்டங்களைப் பெற்ற அணித் தலைவர் என்ற சாதனையை நிகழ்த்திய பாபர் அஸாம் ஆட்டமிழந்து சென்றபோது அரங்கில் குழுமியிருந்த இரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்து பாராட்டினர்.
சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் 2009க்குப் பின்னர் ஐசிசி ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தானை அஸாம் வழிநடத்தியிருந்தமை அவரது திறமைக்கு கிடைத்த மற்றொரு சான்றாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM