நீண்ட கால மகிழ்ச்சிக்கு 4 சவால்கள்…!

Published By: Ponmalar

26 Jan, 2023 | 05:31 PM
image

உங்களை எது மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்ற கேள்வியை கேட்டால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதில்களை கூறுவர். தொழில்துறையில் இருப்போருக்கு மிகப்பெரிய முதலீடு, விற்பனையை முடித்தல் அல்லது இயற்கை விரும்பிகளுக்கு பல சிரமங்களுக்கு பிறகு மலை உச்சியை அடைவது அல்லது குழந்தைகளுக்கு கோடைகாலத்தில் சூப்பரான ஐஸ்கிரீம் சாப்பிடுவது என ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும்.

ஆனால், உங்களை உண்மையில் நீண்ட காலம் மகிழ்ச்சியாக எது வைத்திருக்கும் என்பதற்கான அறிவியல்பூர்வமான காரணம் குறித்து அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் சுமார் 85 ஆண்டுகள் நடத்திய ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் நீண்டகால மகிழ்ச்சி என்பது செல்வத்தையோ அல்லது சாதனையையோ அல்லது மகிழ்ச்சியாக இருப்பது கூட அல்ல. இது நம் வாழ்க்கையில், பணிபுரியும் இடங்களில், சமுதாயத்தில் உள்ள மக்களுடன், நாம் உருவாக்கும் உறவுகள் தான் நீண்ட கால மகிழ்ச்சியை தருகின்றன என கூறப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு நியூயோர்க் டைம்ஸ் இதழ், 7 நாட்கள் மகிழ்ச்சிக்கான சவாலை இந்தாண்டு ஆரம்பித்துள்ளது. 10 நிமிடத்தில் மகிழ்ச்சியை மனதில் கொண்டு வரும் மதிப்புமிக்க இந்த சவாலுக்கு, 4 வழிகளை குறிப்பிட்டுள்ளது. ஒருநாளில் எப்போது வேண்டுமானாலும் முயற்சித்து பார்க்கலாம். அதுகுறித்து பார்ப்போம்.

1. எட்டு நிமிடம் நண்பர்களிடம் போனில் உரையாடுதல்:

டைம்ஸ் இதழின் கட்டுரையாளர், ஜான்சி டன், தனது தோழி, ஒருவருடன் இதை முயற்சித்து பார்த்த போது, அவர் அவரது மனநிலையை எவ்வளவு சக்திவாய்ந்ததாக மாற்றியது என ஆச்சரியப்பட்டார். எட்டு நிமிட போனில் பேசும் திட்டம், உரையாடல்களில் உள்ள இரண்டு சிக்கல்களைத் தீர்க்கிறது.

முதலாவது, நம்மில் பெரும்பாலோர் நேரம் கிடைக்கும் போது பேசிகொள்ளலாமென, பல நேரங்களில் பேசாமல் இருக்கிறோம். நம் நண்பர்களுக்கும் நிறைய நேரம் கிடைக்கும் போது பேசுவார்கள் என்றால் அது நிகழவே நிகழாது. எனவே நாம் இப்போதே நேரம் ஒதுக்க வேண்டும்.

இரண்டாவது, நண்பர்களுடான பெரும்பாலான உரையாடல்கள் மிக நீண்டதாக இருக்கும். எனவே பேச துவங்கும் முன் எட்டு நிமிடம் என நேரம் நிர்ணயித்து கொள்வது, மிகவும் பிஸியாக இருக்கும் நண்பர் கூட பதிலுக்கு,ஆம் என்று கூறுவதை எளிதாக்கும்.

ஒருவருடன் போனில் பேசுவது, அவர்களுடன் குறுஞ்செய்தி அனுப்புவது அல்லது சமூக வலைதளங்களில் அரட்டையடிப்பதைக் காட்டிலும் மிகவும் சக்திவாய்ந்த வழியாகும். உங்களால் முடிந்தால் இன்றே எட்டு நிமிட தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளுங்கள்.

2. முன்பின் தெரியாதவருடன் உரையாடல் :

முன்பின் தெரியாத நபருடன், உரையாடலைத் தொடங்குவது நம் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. வாழ்க்கையின் சுவாரஸ்யம் அடுத்து என்ன நடக்கும் என்பதை நாம் அறியாமல் இருப்பதே. இருப்பினும்எதிர்பாராததை எதிர்பாருங்கள் என ஏதேனும் பொது நிகழ்ச்சியில் எதிர்படும் நபரிடம் உரையாடுவது என்றேனும் நமக்கு எதிர்காலத்தில் நெருங்கிய நண்பர்களாக கூட மாற்றலாம்.

3. சக பணியாளர் குறித்து தெரிந்துகொள்ளுங்கள் :

பணிச்சூழலில் நம்முடன் பணிபுரியும் நண்பர்கள் நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானவர்கள். உறவுகளின் மதிப்பை நாம் எப்போதும் அங்கீகரிப்பதில்லை என வல்லுனர்கள் கூறுகின்றனர். எனவே நீங்கள் நன்கு தெரிந்துகொள்ள விரும்பும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். நீங்கள் நண்பராக மாற, விரும்பும் நபர் அறிமுகமானவராக இருக்கலாம் அல்லது உங்களுக்கு அறிமுகமில்லாதவராக இருக்கலாம், ஆனால் தெரிந்துகொள்ள விரும்பும் ஒருவராக இருக்கலாம்.

உங்களுக்கு அவருக்கும் பொதுவான விஷயத்தில் இந்த உரையாடலை ஆரம்பிக்கலாம்.மேலும் அவரது சொந்த நிகழ்வோ அல்லது குடும்ப உறுப்பினரின் திருமணத்தில் கலந்துகொள்ளலாம். நீங்கள் கவனம் செலுத்தி, நினைவில் வைத்திருப்பதில் அவர்கள் ஈர்க்கப்பட்டு மகிழ்ச்சி அடைவார்கள். இதன்மூலம் நீங்கள் அவரை, அறிமுகமானவராக மாற்றியிருப்பீர்கள்.

அறிமுகமானவர், நண்பராக மாற சில நிமிடங்கள் மட்டுமே எடுக்கும். ஒரு சிறிய மற்றும் எளிதான உதவியைச் செய்யும்படி அவர்களிடம் கேளுங்கள். ஒருவரை விரும்புவதற்கு உள்ளுணர்வு சொல்வதை கேட்பது பொருத்தமாக இருக்கும். இது குறிப்பிட்ட நபருடன் சரியாக பொருந்தவில்லை எனில், வேறொருவரைத் தேர்ந்தெடுத்து மீண்டும் முயற்சித்து பாருங்கள்.

4. நன்றி கூறி செய்தி அனுப்புங்கள் :

நன்றி செலுத்துபவருக்கும் நன்றியைப் பெறுபவருக்கும் உடனடி மகிழ்ச்சியான பலன்களை உருவாக்குகிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. ஒரு நண்பர், அன்புக்குரியவர், குடும்ப உறுப்பினர் அல்லது உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உதவிய ஒருவருக்கு ஒரு குறிப்பை எழுத சில நிமிடங்கள் ஒதுக்குங்கள்.

அது நீங்கள் தினமும் பார்க்கும் ஒரு நபராக இருக்கலாம் அல்லது பல ஆண்டுகளாக நீங்கள் பேசாத ஒருவராக இருக்கலாம். இந்த நபருக்கு நீங்கள் அனுப்பக்கூடிய கடைசி செய்தி இதுவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள். மேலும் நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பதை எழுதுங்கள். இதைப் பற்றி நீங்கள் பெரிய அளவில் சிந்திக்கத் தேவையில்லை. 10 நிமிடங்களே போதும். மின்னஞ்சல் அல்லது சமூக ஊடகம் மூலம் அனுப்பவும்.

மறுமுனையில் இருப்பவர் உங்களிடமிருந்து நீண்ட காலமாக எதுவும் கேட்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். மக்கள் எப்பொழுதும் நன்றிக் குறிப்பைப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறார்கள். அது நீண்ட காலமாக அவர்கள் எதிர்பாராத ஒருவரிடமிருந்து வந்தாலும் கூட மகிழ்ச்சியைத் தரும். அதை அனுப்புவது உங்களுக்கும் மகிழ்ச்சியை தரும்.

உங்களால் முடிந்தால், வரும் வாரத்தில் ஒவ்வொரு நாளும் இந்த 10 நிமிட சவால்களில் ஒன்றை முயற்சிக்கவும். மொத்தம் ஒரு மணிநேரம் மட்டுமே எடுத்து கொள்ளும். வார இறுதியில், நீங்கள் முன்பு இருந்ததை விட மகிழ்ச்சியாக நன்றாக உணர முடிந்ததா என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பதில் ஆம் எனில், வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாற்றி கொள்ளுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்