புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின ; அகில இலங்கை , மாவட்ட மட்ட தரப்படுத்தல்கள் இல்லை

Published By: Digital Desk 3

26 Jan, 2023 | 04:27 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று புதன்கிழமை இரவு வெளியிடப்பட்டன. 2022 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி இடம்பெற்றது. இப்பரீட்சைக்கு 334,805 பரீட்சாத்திகள் விண்ணப்பித்திருந்த போதிலும் , 329,668 பரீசாத்திகளே பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இதற்காக மாவட்ட ரீதியில் வெட்டுப்புள்ளிகளும் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய கொழும்பு கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களுக்க சிங்க மொழிக்கான வெட்டுப்புள்ளி 153 எனவும் , தமிழ் மொழிக்கு 144 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு சிங்கள மொழிக்கு 150 வெட்டுப்புள்ளியாகவும் , தமிழ் மொழிக்கு முறையே 140 மற்றும் 142 வெட்டுப்புள்ளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு சிங்கள மொழியில் வெட்டுப்புள்ளி 148 என்றும் , தமிழ் மொழியில் முறையே 143, 142, 141, 142, 142 மற்றும் 141 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சிங்கள மொழிக்கான வெட்டுப்புள்ளி 147 என்றும் தமிழ் மொழிக்கான வெட்டுப்புள்ளி 142 என்றும் பரீட்சை திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியில் மாத்திரம் பரீட்சை இடம்பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 142 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இம்முறை நாடளாவிய ரீதியிலும் , மாவட்ட ரீதியிலும் முதலாமிடம் பெற்ற மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை என்றும் பரீட்சை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மீள் விடைத்தாள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு பெப்ரவரி 28 ஆம் திகதி வரை அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்