(சதீஸ்)

வவுனியா - பர்நாட்டான்கல் பிரதேசத்தில் 38 வயதுடைய குடும்பஸ்தவர் ஒருவர் இன்று காலைமுதல் (23) உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

தனது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியை மீட்டு தருமாறு கோரி உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார். 

கடந்த திங்கட்கிழமை (19) குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை விரட்டியுள்ளார். மனைவியும், பிள்ளைகளும் இதுவரை வீடு திரும்பாததையடுத்து சி.சிவகுமார் (38) என்ற குடும்பஸ்தர் மனைவி, பிள்ளைகள் வரும்வரை தான் சாகும் வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார். 

கிராம சேவகர் அலுவலகத்தில் உண்ணாவிரதத்தை மேற்கொண்ட போதும் அவ்விடத்தில் பொலிஸார் அனுமதிக்காததன் காரணத்தினால் கிராம சேவகரின் அலுவலகத்திற்கு அண்மையில் உள்ள புளிய மரத்தின் கீழ் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.