வரவு செலவு திட்டம் என்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்றாகும். இவ் வரவு செலவு திட்டத்தின் ஊடாகவே அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் அடைந்து கொள்வதற்கு தேவையான நிதி விதிமுறைகள் ஒதுக்கப்படுகின்றன. அரசாங்கமானது அதன் கொள்கை இலக்குகளை அடைந்து கொள்ளும் பொருட்டு நிதிகளை திரட்டுகின்றது மற்றும் ஒதுக்குகிறது என்பதை திட்டமிடுவதற்காக இது பயன்படுத்தப்படுகின்றது. இது ஒரு குறிப்பிட்டதொரு காலப்பகுதிக்கு ஏதுவான உத்தேச செலவினங்கள் வருமானம் கடன் மற்றும் பிற கொடுக்கல் வாங்கல்களை எடுத்துரைக்கின்றது.
அந்தவகையில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவு திட்டம் வெளியிடப்படும்.
பாரம்பரியத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் 'அல்வா விழா' நடத்தப்படுகிறது.
வரவு செலவு திட்டம் தயாரிப்பதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதை குறிக்கும் வகையில் இந்த அல்வா தயாரிப்பு விழா நடத்தப்படுகிறது.
இந்திய இனிப்பு ஒரு பெரிய பாத்திரத்தில் தயாரிக்கப்பட்டு நிதி அமைச்சக ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடாயில் அல்வாவை கிளறி சக அமைச்சக பணியாளர்களுக்கு நேற்று (ஜன 27) பரிமாறினார்.
பாராளுமன்றத்தின் நார்த் பிளாக்கில் இந்த அல்வா கிண்டும் நிகழ்வு நடைபெற்றது.
இதனையடுத்து, வரவு செலவு திட்டம் தொடர்பான அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கும். பெப்ரவரி 1 ஆம் திகதி இந்திய நிதியமைச்சர் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM