களுவாஞ்சிக்குடி - களுதாவெளி கடற்பரப்பில் கரையொதுங்கிய சுமார் 15 அடிய நீளமுடைய உலோகப்  பொருள் விமானமொன்றின் பாகம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக பாசிக்குடா கடற்பரப்பில் மர்ம பொருள் ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த விமானத்தின் பாகம் என நம்பப்படும் பொருளொன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த உலோகத்தினை கண்டுபிடித்த மீனவர்கள், அப்பொருள் விமானத்தின் பாகம் என தெரிவித்துள்ள நிலையில், குறித்த உலோகப்  பொருள்  விமானத்தின் பாகம் என்பதனை கடற்படையினர் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த உலோகப்பொருள் தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.