(இராஜதுரை ஹஷான்)
மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடத்தாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடையும்.
தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியை திரைமறைவில் இருந்து முன்னெடுப்பதை விடுத்து ஜனாதிபதி தான் தேர்தலுக்கு தயார் இல்லை என்பதை மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாவல பகுதியில் வியாழக்கிழமை (26) காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மக்களாதரவு அத்தியாவசியமாகும்.மக்களின் ஆதரவு இல்லாமல் அரசாங்கத்தை சிறந்த முறையில் நிர்வகிக்க முடியாது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது, ஆகவே அவர் எடுக்கும் தீர்மானங்களுக்கு நாட்டு மக்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை.
தேர்தல் ஊடாகவே மக்கள் தமது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும். ராஜபக்ஷர்களின் பலவீனமான நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தின் ஊடாக தமது எதிர்பபை வெளிப்படுத்தினார்கள்.
பொது தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கெர்ணடு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடுத்தர மக்களை வரி விதிப்பால் நெருக்கடிக்குள்ளாக்கி ராஜபக்ஷர்களை அருமையாக பாதுகாத்துள்ளார். இந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த இடமளிக்க வேண்டும்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட ஜனாதிபதி செய்யாத சூழ்ச்சி ஏதும் கிடையாது, அனைத்து தடைகளையும் மீறி தேர்தலுக்கு தற்போது திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆணைக்குழு உறுப்பினர் விவகாரத்தில் புது பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது,தேர்தலை நடத்த தோற்றம் பெறும் அனைத்து நெருக்கடிகளுக்கு பின்னணியில் ஜனாதிபதியே உள்ளார்.
மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடையும்.
தேர்தலை பிற்போடும் சூழ்ச்சிகளை திரைமறையில் இருந்து முன்னெடுப்பதை விடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் தேர்தலுக்கு தயார் இல்லை என்பதை நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM