தேசிய வலைப்பந்தாட்ட தலைமை பயிற்றுநராக மீண்டும் திலகா ஜினதாச

Published By: Vishnu

26 Jan, 2023 | 10:02 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கை வலைபந்தாட்ட வரலாற்றில் வெற்றிகரமான பயிற்றுநர் என்ற பெயரையும் புகழையும் கொண்டிருக்கும் ஒலிம்பியன் திலகா ஜினதாச மீண்டும் தேசிய வலைபந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியின்போது பயிற்றுநராக இருந்த ஹயசிந்த் விஜேசிங்கவுக்குப் பதிலாகவே திலகா ஜினதாசவிடம் இந்த முக்கிய பொறுப்பை இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம் வழங்கியுள்ளது.

தென் ஆபிரிக்காவில் இந்த வருடம் ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டத்திற்கு இலங்கை அணியைத் தயார் செய்வதே திலகா ஜினதாச முன்னே உள்ள பிரதான சவாலாக அமையவுள்ளது.

ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் இரண்டு தடவைகள் (2009, 2018) சம்பியனாவதற்கு இலங்கை அணியை வழிநடத்திய திலகா, 2011இலும் 2019இலும் உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் பங்குபற்றிய இலங்கை அணியின் பயிற்றுநராகவும் செயற்பட்டிருந்தார்.

வலைபந்தாட்டத்துடன் சுமார் 3 தசாப்தங்கள் தொடர்புடைய திலகா ஜினதாச, ஒலிம்பிக் வீராங்கனையும் ஆவார்.

ஆரம்பத்தில் மெய்வல்லுநர் வீராங்கனையாக உள்ளூரில் பிரகாசித்த அவர், தேசிய மெய்வல்லுநர் அணியிலும் பின்னர் வலைபந்தாட்ட தேசிய அணியிலும் இடம்பெற்ற இரட்டை சர்வதேச வீராங்கனையாவார்.

சோல் 1988 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 100 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் பங்குபற்றியதன் மூலம்  ஒலிம்பிக்கில்  பங்குபற்றிய முதலாவது  இலங்கை  பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

உள்ளூர் மெய்வல்லுநர் வாழ்க்கையில் பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிக்கான சாதனையை ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக தன்னகத்தே கொண்டிருந்த அவர், 1986க்கும் 1987க்கும் இடைப்பட்ட 12 மாதங்களில் 9 தடவைகள் சொந்த சாதனையைப் புதுப்பித்திருந்தார்.

தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் அதிசிறந்த பெறுபெறுகளை ஈட்டும் வகையில் அனுபவம் மிக்க வீராங்கனைகளுடன் புதிய விராங்கனைகளையும் இணைத்து பலம் வாய்ந்த அணியை உருவாக்குவதே தனது முக்கிய பணி என திலகா ஜினதாச குறிப்பிட்டார்.

'குறுகிய காலத்தில் அணி ஒன்றைக் கட்டி எழுப்புவது இலகுவானது அல்ல என்பதை நான் அறிவேன். ஆனால், கடுமையான பயிற்சி, அர்ப்பணிப்புத்தன்மை, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம் வீராங்கனைகள் தங்களது அதிகபட்ச திறமையை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறேன்' என்றார் அவர்.

வலைபந்தாட்ட அணியின் உதவிப் பயிற்றுநராக பி. டி. பிரசாதி நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41