முஜிபுர் ரஹ்மானின் இடத்திற்கு பௌசி  : வர்த்தமானி வெளியானது

25 Jan, 2023 | 08:13 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கொழும்பு மாநகர சபை நகர பிதாவாக போட்டியிட முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்புரிமையை துறந்ததை தொடர்ந்து ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு மொஹமட் பௌசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி வெளியிட்டுள்ளது.

1981 ஆம்  இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 62 ஆம் பிரிவின் கீழ் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பதவி விலகியதை தொடர்ந்து ஒன்பதாவது பாராளுமன்றத்தில் உறுப்பாண்மையில் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் சட்டத்தின் 64(1) பிரிவின் கீழ் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்தார்.

 ஆரசியலமைப்பின் அரசியலமைப்பின் 99 (13) (ஆ) உப உறுப்புரையின் கீழான ஏற்பாடுகளின் பிரகாரம் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பதவி விலகிய உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலருக்கு 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆவது பிரிவின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்தது

.தெரிவத்தாட்சி அலுவலர் அரசியலமைப்பின் 99 (13) (ஆ) உப உறுப்புரைக்கு அமைய மற்றும் 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(2) ஆவது உறுப்புரையின் கீழ் செயற்பட்டு அந்த தேர்தல் மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினராக அப்துல் ஹமீட் மொஹமட் பௌசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(2) ஆவது பிரிவினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு அமைய மொஹமட் முஜிபுர் ரஹூமான்  சுயமாக பதவி விலகியதை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பாண்மையில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மொஹமட் பௌசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறோம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட ஏனைய நான்கு உறுப்பினர்களும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு...

2023-02-04 18:25:06
news-image

75 வருட சுதந்திர இலங்கையில் நாம்...

2023-02-04 18:31:07
news-image

சவால்களுக்கு நீங்கள் தனித்து முகங்கொடுக்கவில்லை என்பதை...

2023-02-04 18:34:09
news-image

ஒற்றையாட்சி அரசில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான...

2023-02-04 18:52:41
news-image

உயர் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற சுதந்திர...

2023-02-04 18:28:58
news-image

அம்பாறை காட்டுப்பகுதில் கஞ்சா தோட்டம் முற்றுகை...

2023-02-04 18:27:00
news-image

சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளாத...

2023-02-04 14:51:20
news-image

யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்...

2023-02-04 18:32:12
news-image

யாழில் இடம்பெற்ற 75 ஆவது சுதந்திர...

2023-02-04 18:27:56
news-image

வெளிநாட்டுத் தூதுவர்களுக்கான கண்டி நிகழ்வு குறித்த...

2023-02-04 14:39:02
news-image

சுதந்திர தினத்தில் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம்

2023-02-04 14:36:49
news-image

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இரு உறுப்பினர்கள் இராஜிநாமா

2023-02-04 14:44:53