துருக்கியில் வேலை வாய்ப்பு என சமூக ஊடகங்களில் போலி விளம்பரம் - நேர்முகத்தேர்விற்கு வந்தவர்கள் ஏமாற்றம் - குழப்பநிலை

By Rajeeban

25 Jan, 2023 | 06:04 PM
image

சமூக ஊடகங்களில் வேலைவாய்ப்பிற்கான நேர்முகம் என போலிவிளம்பரம் செய்து பெருமளவானவர்களை ஏமாற்றிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியான இந்த விளம்பரத்தை நம்பி நாட்டின் பல பாகங்களில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொழும்பில் ஜே.ஆர் ஜெயவர்த்தன நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

எனினும் அவர்களை அங்கிருந்தவர்கள் திருப்பி அனுப்பியதை தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டதுடன் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

அமைச்சர்மனுசநாணயக்கார இதனை உறுதி செய்துள்ளார்.

சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்களை வெளியிட்டு மூன்றாம் தரப்பொன்று இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கியில் வேலைவாய்ப்பு என தெரிவித்து சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டே பொதுமக்களை குறிப்பிட்ட தரப்பினர் ஏமாற்றியுள்ளனர்.

துருக்கியில் சில வேலைவாய்ப்புகள் உள்ளன ஆனால் இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் மனுசநாணயக்கார  இவ்வாறான போலி விளம்பரங்களை நம்புவதற்கு பதில் உத்தியோகபூர்வமாக வெளியாகும் அறிவிப்புகளை பொதுமக்கள் நம்பவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை துருக்கியில்வேலைவாய்ப்பு குறித்த இந்த விளம்பரத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை என இலங்கைக்கான துருக்கி தூதரகம் தெரிவித்துள்ளது.

துருக்கியின் உள்துறை அமைச்சிற்கும் இந்த விடயத்தில் எந்த தொடர்புமில்லை தூதரகம் தெரிவித்துள்ளது.

துருக்கி இலங்கையிலிருந்து ஆட்களை வேலைக்கு எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என சில பிழையான தகவல்கள் வெளியாவது குறித்து அறிந்துள்ளோம்,இது தனிப்பட்ட சிலர் நபர்கள் ஏற்பாடு செய்துள்ள விடயம் போல தெரிகி;ன்றது என தூதரகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு...

2023-02-04 18:25:06
news-image

75 வருட சுதந்திர இலங்கையில் நாம்...

2023-02-04 18:31:07
news-image

சவால்களுக்கு நீங்கள் தனித்து முகங்கொடுக்கவில்லை என்பதை...

2023-02-04 18:34:09
news-image

ஒற்றையாட்சி அரசில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான...

2023-02-04 18:52:41
news-image

உயர் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற சுதந்திர...

2023-02-04 18:28:58
news-image

அம்பாறை காட்டுப்பகுதில் கஞ்சா தோட்டம் முற்றுகை...

2023-02-04 18:27:00
news-image

சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளாத...

2023-02-04 14:51:20
news-image

யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்...

2023-02-04 18:32:12
news-image

யாழில் இடம்பெற்ற 75 ஆவது சுதந்திர...

2023-02-04 18:27:56
news-image

வெளிநாட்டுத் தூதுவர்களுக்கான கண்டி நிகழ்வு குறித்த...

2023-02-04 14:39:02
news-image

சுதந்திர தினத்தில் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம்

2023-02-04 14:36:49
news-image

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இரு உறுப்பினர்கள் இராஜிநாமா

2023-02-04 14:44:53