(ஏ.என்.ஐ)
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹா ஆகியோர் மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டதுடன் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தனர்.
இதன்போது உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,
காங்கிரஸ் அரசியல்வாதிகள் பாஜகவை அவதூறு செய்தால், நான் கவலைப்பட மாட்டேன். ஆனால், அவர்கள் இந்திய வீரர்களின் துணிச்சலை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.
ஒரு காங்கிரஸ் அரசியல்வாதி 'பாரத் ஜோடோ யாத்ரா' நடத்துகிறார். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக நான் அதிகம் பேச விரும்புவதில்லை.
சீனாவுடனான மோதலில் இந்திய வீரர்கள் தீவிர துணிச்சலை உலகுக்கு வெளிப்படுத்தியதை நினைவுகூர விரும்புகிறேன்.
போர் விமானங்கள், ஏவுகணைகள், போர்க்கப்பல்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பாதுகாப்புத்துறைக்கான அனைத்தையும் முன்பு மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தோம்.
ஆனால், இப்போது எல்லாவற்றையும் இந்தியாவிலேயே தயாரித்து, மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளோம்.
மேலும், நாட்டில் பாரத் ஜோடோ யாத்திரை நடத்தும் ராகுல் காந்தியிடம் ஒரு விடயத்தை வினவ விரும்புகிறேன்.
நாட்டில் எமக்கு வெறுப்பு இருப்பதாக கூறி இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுவது யார்? எனவே, உணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM