நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேரையும் எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதிவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு யாழ்.நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (21) நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுடைய  3 மீன்பிடி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.