(எம்.ஆர்.எம்.வசீம்)
சவூதி நாட்டுக்கு 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட குழுவினர் அங்கு பலதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விஜயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே காதர் மஸ்தான் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு மற்றும் முதலீடுகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். இப்பேச்சுவார்த்தை சாதகமாக அமையும்.
எமது நாடு பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு வெளிநாட்டு உதவிகள் முக்கியமானதாகும். நாட்டின் பொருளாதார கட்டமைப்பை விருத்தி செய்யவும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்த தூதுக்குழுவினர், இந்த விஜயத்தின்போது இருநாட்டு உறவுகள் மற்றும் பரஸ்பர வர்த்தக மேம்பாடு குறித்து சவூதி அரச உயர் மட்டத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் விஜயங்களை மேற்கொள்ள உள்ளனர்.
நேற்று (24) காலை 9.15 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலமாக புறப்பட்ட மேற்படி தூதுக்குழுவினர் எதிர்வரும் 27ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM