கொழும்பில் நீண்டகாலமாக இயங்கிவந்த வெளிநாட்டு மதுபான போத்தல்கள் விற்பனையை சுற்றிவளைத்ததுடன், சந்தேக நபர் ஒருவரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பினை  பொலிஸ் விசேட படையினர் மற்றும் போதைப்பொருள்  தடுப்பு பிரிவினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது 10 இலட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சொகுசு வாகனமொன்றில் குறித்த வெளிநாட்டு  மதுபான போத்தல் விற்பனை இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.