(எம்.எம்.சில்வெஸ்டர்)
பிரோட் லேண்ட் நீர் மின் திட்டம் காரணமாக கித்துல்கல வைட் வோட்டர் ராஃப்டிங் விளையாட்டு மற்றும் அதனுடனான சுற்றுலாத் துறைக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் பெரும் அபிமானத்தை பெற்றதாக கித்துல்கல வைட் வோட்டர் ராஃப்டிங் (white water Rafting) நீர் விளையாட்டு காணப்படுகிறது. இது அதிக சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் தளமாகவும் விளங்குகிறது.
இவ்வாறான நிலையில், அப்பகுதியில் பிரோட் லேண்ட் நீர் மின் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த மின் திட்டம் கொண்டுவரப்படுவதால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, சாத்தியமான தீர்வுகளைப் பரிந்துரை செய்யும்படி குறித்து குழுவுக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
பிரோட் லேண்ட் நீர் மின் திட்டத்தினால் கித்துல்கல வைட் வோட்டர் ராஃப்டிங் விளையாட்டு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த திங்களன்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியின் செயலாளர் மேற்படி பணிப்புரையை வழங்கினார்.
சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் இக்குழுவில் அங்கம் வகிப்பதுடன், இது தொடர்பில் கள விசாரணை நடத்தி இரண்டு வாரங்களுக்குள் அதற்கான அறிக்கையை சமர்பிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதியின் செயலாளர் இக்கூட்டத்தில் ஆலோசனை வழங்கினார்.
பிரோட் லேண்ட் நீர்மின் திட்டம் காரணமாக கித்துல்கல வைட் வோட்டர் ராஃப்டிங் விளையாட்டு மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதனுடன் தொடர்புடைய சேவைகளை வழங்கும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் காரணமாக தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரக்கூடிய இந்த விளையாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM