கலிபோர்னியாவில் சமீபத்தில் இடம்பெற்ற படுகொலைகள் குடியேற்றவாசிகள் மத்தியில் துப்பாக்கி கலாச்சாரம் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளன.
மெக்சிக்கோ கியுபாவிலிருந்து ஏனைய குடியேற்றவாசிகளுடன் ஜோசே ரொமேரோ இரண்டு வருடங்களிற்கு முன்னர் கலிபோர்னியாவின் தோட்டங்களில் வேலை பார்ப்பதற்கு வந்தவேளை அவர் அமெரிக்கா பாதுகாப்பான நாடு என கருதினார்.
எனினும் திங்கட்கிழமை சான்பிரான்சிஸ்கோவின் ஹாவ் மூன் பேயில் திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் தோட்டங்களில் வேலை பார்க்கும் பல தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் இவர்களில் ஜோசோ ரொமேரோவும் ஒருவர்.
லொஸ் ஏஞ்;சல்சிற்கு வெளியே ஆசிய அமெரிக்க சமூகத்தினர் வாழும் மொன்டெரே பார்க்கில் நடனநிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற மறுநாள் இடம்பெற்ற இந்த சம்பவம் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு பழகிப்போன அமெரிக்காவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
குடியேற்றவாசிகளிற்கு ஆதரவளித்து வந்த இரு நெருக்கமான சமூகங்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் 18 பேரை பலியெடுத்துள்ளது.
நீங்கள் உங்கள் வாழ்க்கையை முன்னேற்ற நினைக்கின்றீர்கள் ஆனால் இவ்வாறான சம்பவங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என ரொமேரோவின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதலிற்கு இலக்கான சமூகத்தினால் நன்கு அறியப்பட்ட நபரே முதலாவது தாக்குதலையும் பண்ணையில் பணியாற்றிய நபரே இரண்டாவது தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது அமெரிக்காவில் இனவெறி தாக்குதலிற்குள்ளாகிவரும் குடியேற்றவாசிகளின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் ஆசிய இலத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த குடியேற்றவாசிகள் தாங்கள் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு பலியாககூடும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
32 வீதமான ஆசிய குடியேற்றவாசிகளும் 23 வீதமான இலத்தீன்அமெரிக்க நாடுகளை சேர்ந்த குடியேற்றவாசிகளும் இவ்வாறு அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் பிறந்தவர்கள் மத்தியில் துப்பாக்கி கலாச்சாரம் குறித்து காணப்படும் அச்சத்தை விட இது மூன்று மடங்கு அதிகம் என கலிபோர்னியா பல்கலைகழகம் சேகரித்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கி;ன்றன.
1983 இல் மெக்சிக்கோவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த என்பவர் தனது நாட்டின் போதைப்பொருள் வன்முறைக்கும் அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறைக்கும் இடையில் சிக்குண்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளார்.
நாங்கள் இங்கு இதனை எதிர்பார்க்கவில்லை என்ன துயரம் என்கின்றார் அவர் .
ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற மொன்டெரி பாக்கின் மக்கள் அமெரிக்காவின் நச்சு துப்பாக்கி கலாச்சாரமும் துப்பாக்கி பிரயோகங்களும் ஆசிய ஆபிரிக்க சமூகங்களை பாதிக்கின்றது என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கர்களிடம் துப்பாக்கியுள்ளது எங்கும் துப்பாக்கியுள்ளது என சீனாவை சேர்ந்த பிராங் கியோ தெரிவிக்கின்றார்.
பட உதவி - ஏ.பி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM