அரசியலமைப்பு பேரவையின் கன்னி கூட்டத்தில் ஆணைக்குழுக்களின் உறுப்பினர் நியமனம் தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இல்லை

By T. Saranya

25 Jan, 2023 | 08:17 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட 'அரசியலமைப்பு பேரவையின் முதலாவது கன்னி கூட்டம்  புதன்கிழமை (ஜன 25) காலை 09.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

அரசியலமைப்பு பேரவையின் முதலாவது கன்னி அமர்வில் ஆணைக்குழுக்களின் உறுப்பினர் நியமனம் தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், வெற்றிடமாகியுள்ள உயர் பதவிகளுக்கான நியமனம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டது. 21 ஆவது திருத்தம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட போதும் உறுப்பினர் நியமனத்தில் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் மாறுப்பட்ட வேறுப்பாடு காணப்பட்ட காரணத்தினால் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் நியமனம் இழுபறி நிலையில் இருந்தது.

அரசியலமைப்பு பேரவை சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உட்பட 10 உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது. ஜனாதிபதியின் பிரதிநிதியாக சிவில் விமான சேவைகள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,அரசாங்கத்தின் பிரநிதியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்,எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அரசியலமைப்பு பேரவையில் சிறுபான்மை சமூகத்தின் உறுப்பினர் ஒருவர் அங்கம் வகிக்க வேண்டும்.இதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. கூட்டமைப்பின் பரிந்துரைக்கு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல் வீரவன்ச தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அரசியலமைப்பு பேரவையின் தமது பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை பரிந்துரை செய்தனர். இதனால் சிறுபான்மை சமூக உறுப்பினர் நியமனம் இழுபறி நிலையில் உள்ளது.

அரசியலமைப்பு பேரவையின் சிவில் சமூக உறுப்பினர்களாக கலாநிதி பிரதாப் இராமானுஜம், வைத்தியர் தில்ருக்ஷி அனுலா விஜேசுந்தர,கலாநிதி தினேஷ் சமரரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்,சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக உறுப்பினர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைப்பது அரசியலமைப்பு பேரவையின் பிரதான கடமையாக உள்ளது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து நீதிச் சேவை ஆணைக்குழுவை தவிர ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவி வரிதாகும்.தற்போது ஆணைக்குழுக்களில் பதில் தலைவர் மற்றும் பதில் உறுப்பினர்களே பதவி வகிக்கின்றார்கள்.

அரசியலமைப்பு பேரவை ஊடாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களை மாற்றியமைத்து உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை விசேட செய்தி ஒன்றை வெளியிட்டிந்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் நேற்று புதன்கிழமை காலை இடம் பெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தில் ஆணைக்குழுக்களின் புதிய உறுப்பினர் நியமனம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவில்லை என அறிய முடிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் கொள்கை உரை பயனற்றது -...

2023-02-08 15:56:23
news-image

வரிக் கொள்கை வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் -...

2023-02-08 14:36:56
news-image

எளிமையான முறையில் இடம்பெற்ற 9 ஆவது...

2023-02-08 16:05:15
news-image

அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு...

2023-02-08 14:34:26
news-image

மலையகப் பிரதிநிதிகளுடன் பேசப்போவதாக ரணில் சொல்வதை...

2023-02-08 16:52:58
news-image

அத்தியாவசியமான அரச செலவினங்களுக்கு மாத்திரமே நிதி...

2023-02-08 16:26:15
news-image

வரி திருத்த சட்டத்தை அரசாங்கம் மீளப்பெற...

2023-02-08 15:54:09
news-image

இனப்பிரச்சனைக்கான தீர்வு பெரும்பான்மை சிங்கள மக்களின்...

2023-02-08 15:18:23
news-image

எதிர்காலத்தில் இ.தொ.கா. மக்களுக்கு தேவையான விடயங்களை...

2023-02-08 17:02:02
news-image

அக்கிராசன உரை புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து...

2023-02-08 16:48:01
news-image

புதிய வரி அறவீட்டுக்கு எதிராக தொழில்...

2023-02-08 16:38:26
news-image

மக்களுக்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல...

2023-02-08 16:36:18