பேருவளையில் தற்கொலைக்கு முயற்சித்த மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவன் : இருவரும் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!

Published By: Digital Desk 3

25 Jan, 2023 | 02:23 PM
image

பேருவளையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர்  தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததுடன்  தீயை அணைக்கச் சென்ற அவரது கணவரும் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் 28 மற்றும் 24  வயதுடைய  தம்பதிகள் என பொலிஸார் தெரிவித்தனர்.  

நேற்று (24) பகல் இவர்களுக்கிடையில்  ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, மனைவி பிளாஸ்டிக் கலனில் காணப்பட்ட  மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி  தீ வைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவத்தில்  காயமடைந்த  இருவரும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். 

பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் பத்மகுமாரவின் பணிப்புரைக்கமைய, பொலிஸ் பரிசோதகர் கயான் கிரிஷாந்த தலைமையிலான பொலிஸார்   விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43