(பா.ருத்திரகுமார்)

இலங்கையின் முதலாவது பெண் கிரண்டி கிரேன் இயக்குனர்களை வெகு விரைவில் இலங்கை துறைமுக அதிகாரசபை அறிமுகப்படுத்துமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். 

கொழும்பு கடல்சார் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் அர்ஜுண மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இலங்கை துறைமுக அதிகார சபையின் மாபொல பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுகின்ற பெண் கிரண்டி கிரேன் இயக்குனர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி தங்கள் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்கள். சாதரணமாக ஆண்களே கிரண்டி கிரேன்களை இயக்குகின்றார்கள். நாம் அம்முறையை மாற்றியமைத்தோம். நாம் பெண்களுக்கு பயிற்சிகளை வழங்கினோம். எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி இவ்வனைத்து பெண்களும் கிரேன் இயக்குனர்களாக இலங்கை துறைமுக அதிகார சபையில்  தங்களுடைய கடமைகளை பொறுப்பேற்பார்கள் என தெரிவித்தார்.