இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராக லயன்நேஷன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க்கின் நிர்வாக இயக்குநர் கருப்பையா ராமகிருஷ்ணன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் மதிவாணன் கேட்போர்கூடத்தில் ஜனவரி 21 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை தொழில்முறை விளையாட்டுத்துறை ஊடவியலாளர்கள் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டத்தின்போது புதிய நிருவாகிகள் தெரிவு இடம்பெற்றது.
சங்கத்தின் முன்னாள் தலைவர் சாரங்க பத்திரணவின் காபந்து தலைமைத்துவத்தில் புதிய நிருவாகிகள் தெரிவு நடைபெற்றது.
தலைவர், தேசிய ஏற்பாட்டாளர் ஆகிய பதவிகளுக்கு மாத்திரம் போட்டி நிலவியதுடன் ஏனைய பதவிகள் போட்டியின்றி தீர்மானிக்கப்பட்டன.
தலைவர் பதவிக்கு பிரேரிக்கப்பட்ட கருப்பையா ராமகிருஷ்ணனுக்கும் பெத்தும் விஜேரத்னவுக்கும் நடத்தப்பட்ட வாக்களிப்பில் கருப்பையா ராமகிருஷ்ணன் வெற்றிபெற்று மீண்டும் தலைவரானார்.
இதற்கு முன்னர் பொருளாளராக பதவி வகித்த யொஹான் பாசுர செயலாளராகவும் சம்பத் சி. பெரேரா பொருளாளராகவும் போட்டியின்றி தெரிவாகினர்.
புதிய நிருவாகிகள்
தலைவர்: கருப்பையா ராமகிருஷ்ணன் (லங்கா லயன்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க்)
செயலாளர்: யொஹான் பாசுர (லங்காதீப)
பொருளாளர்: சம்பத் சி. பெரேரா (ரூபவாஹினி)
தேசிய ஏற்பாட்டாளர்: சுதர்ஷன பீரிஸ் (திபப்பரே.கொம்)
உதவித் தலைவர்கள்: நெவில் அன்தனி (வீரகேசரி), ஜயஷான்த பெரேரா (இலங்கை வானொலி), கசுன் கெலும் (தெரண), சுசன்தி ப்ரேமச்சந்த்ர (ரூபவாஹினி)
உதவி செயலாளர்: நுவன் உதார (லக்ஹண்ட)
உதவி பொருளாளர்: புத்திக்க துனுசிங்க (ரூபவாஹினி)
செயற்குழு உறுப்பினர்கள்: நாமல் பத்திரகே (லங்காதீப்ப), லஹிரு ஹர்ஷன (லங்காதீப்ப), சஞ்சீவ தர்மசேன (அத), ப்ரசாத் சேனாதீர (ரங்கிரி), சமீர பீரிஸ் (ஸ்போர்ட்ஸ்பொட்டோகிரபி), சுமிந்த தாரக்க (தெரண), தினேஷ் எஸ். பெரேரா (பிரதேச ஊடகவியலாளர்), நுவன் அமரவன்ஷ (மவ்பிம), அசங்க ஹதிரம்பெல (திபப்பரே.கொம்), லஹிரு துஷ்மன்த (ஹிரு), சுரேஷி குணசேகர (ரூபவாஹினி), ஜயமால் சந்த்ரசிறி (லங்காதீப்ப), சமிந்த காமினி (பிபிசி)
இந்நிலையில், தலைவராக தெரிவான கருப்பையா ராமகிருஷ்ணன், தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து கருத்து வெளியிட்டார்.
ஊடகவியலாளர்களுக்கான கல்வி மற்றும் தொழில்முறை பயிற்சியை இலக்காகக் கொண்டு முக்கிய திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இதன்போது கருப்பையா ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், களனி பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானியாவின் பேர்மிங்காம் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து பட்டப்படிப்பை முன்னெடுக்கவுள்ள ஊடகவியலாளர்களுக்கு உதவிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM