இந்திய அதியுயர் விருது பெற்ற வீரகேசரி நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசனுக்கு பாராட்டு விழா

Published By: Nanthini

25 Jan, 2023 | 11:41 AM
image

ந்திய அரசாங்கத்தின் அதியுயர் விருதான பிரவாசி பாரதீய சம்மான் விருது பெற்ற எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட்டின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசனை பாராட்டி கெளரவிக்கும் விழா தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின்  ஏற்பாட்டில் எதிர்வரும் 29ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு, வெள்ளவத்தை தமிழ்ச் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளரும் தமிழ்  ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினருமான பா. அனந்தபால கிட்ணர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில்  வரவேற்புரையினை சுயாதீன ஊடகவியலாளர்  ஏ.ஆர்.வி. லோஷன் ஆற்றவுள்ளார். 

அதனை தொடர்ந்து ஆசியுரையினை நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனும் தலைமையுரையினை  அனந்தபால கிட்ணரும், வாழ்த்துரைகளை பேராசிரியர் மா.செ. மூக்கையா (முன்னாள் உபவேந்தர் - கிழக்கு பல்கலைக்கழகம்), ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, பேராசிரியர் ஆர். சுரேந்திரகுமார் (பீடாதிபதி - மருத்துவபீடம், யாழ். பல்கலைக்கழகம்), பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ், கலாநிதி எஸ். சேந்தன் (பணிப்பாளர் ஊடகம், மனித உரிமைகள் மற்றும் சமாதானத்துக்கான நிலையம், இங்கிலாந்து), பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் (சட்டபீடம், கொழும்பு பல்கலைக்கழகம்), திருமதி அருந்ததி இராஜவிஜயன் (அதிபர், கொழும்பு சைவ மங்கையர் கழகம்) ஆகியோர் வழங்கவுள்ளனர்.

பாராட்டுரைகளை சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன், தே.செந்தில்வேலவர் (பிரதம ஆசிரியர், தினகரன்) ஆர். சிவராஜா (பிரதம ஆசிரியர், தமிழன்), சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.பாரதி, சிரேஷ்ட ஊடகவியலாளர் அ. நிக்ஸன், சி.கேசவன் (விரிவுரையாளர், சியன தேசிய கல்விக் கல்லூரி) ஆகியோர் ஆற்றவுள்ளனர். 

ஏற்புரையினை குமார் நடேசனும், நன்றியுரையினை பரமேஸ்வரன் விக்னேஸ்வரன் (பிரதி செய்திப் பணிப்பாளர், சூரியன் எப்.எம்) ஆகியோர் வழங்கவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயற்கையும் புதுமையும் கலையும் கலந்த 'இன்னொரு...

2023-03-24 12:28:14
news-image

திருகோணமலையில் வாசல் கவிதை சஞ்சிகை வெளியீடு!

2023-03-24 13:49:34
news-image

நல்லூர் நீர்வள உரையாடல்

2023-03-24 13:47:47
news-image

சிலுவைப்பாதை

2023-03-24 10:07:29
news-image

உலக காசநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு...

2023-03-23 16:54:12
news-image

சமூர்த்தி சௌபாக்கியா ரன் விமன திட்டத்தின்...

2023-03-23 15:38:21
news-image

வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும்...

2023-03-23 16:36:26
news-image

இராகலையில் அகவை பூர்த்தி விழாவும் மலர்...

2023-03-23 16:07:35
news-image

மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய முப்பெரும்...

2023-03-22 17:23:59
news-image

நாவிதன்வெளியில் கலாசார உணவு பண்பாட்டு பாரம்பரிய...

2023-03-22 17:03:57
news-image

உலக நீர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு...

2023-03-22 15:44:32
news-image

ஹமீத் அல் ஹுசேனி தேசிய கல்லூரியின்...

2023-03-22 13:57:07