கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கப்ஜா' எனும் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரான ஆர். சந்துரு இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'கப்ஜா'.
இந்த படத்தில் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்புடன் நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா, ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான் சிங், பொமன் இரானி, சுதா, தேவ் கில், எம். காமராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஏ.ஜெ. ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு ‘கே.ஜி.எஃப்’ படப்புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.
கேங்ஸ்டர் வித் எக்ஷன், த்ரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்ப்ரைசஸ் எனும் பட நிறுவனம் சார்பில் ஆர்.சந்திரசேகர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கேரக்டர் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் இந்த படம் எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி வெளியாகிறது. இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டுமன்றி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில்,
“1947ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக்கொள்கிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதை விறுவிறுப்பாக சொல்லும் பிரம்மாண்டமான படைப்பு தான் ‘கப்ஜா’.
இந்த படத்துக்கு ‘தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா’ எனும் டாக் லைனும் இணைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகு குற்றச்சம்பவங்களுக்கான சட்டவிரோத நிழல் உலக தாதாக்கள் உதயமான வரலாற்றையும் இதில் பேசியிருக்கிறோம்” என்றார்.
இதனிடையே ‘அப்பு’ என செல்லமாக அழைக்கப்பட்ட மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளான மார்ச் 17ஆம் திகதியன்று, அவருடைய புகழுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ‘கப்ஜா’ படம் வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளதால், இந்த படத்தை கன்னட திரையுலகினர் கொண்டாடுவர் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM