2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்ஆட்சியை உருவாக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம் என மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்வரும் தேர்தல்களை வெற்றிகொள்ளவே சகல நடவடிக்களையும் முன்னெடுத்து வருகின்றது. 

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. . ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தனித்து இயங்கும் கட்சிகளும் முக்கியமான சந்தர்ப்பங்களில் கைகோர்த்து செயற்படும் என அவர் குறிப்பிட்டார் .