கட்டுப்பாடுகளை மீறுவதால் இதயப் பாதிப்பு உண்டாகிறதா..?

By Ponmalar

25 Jan, 2023 | 10:56 AM
image

உலகளவில் மரணங்களை ஏற்படுத்தும் மருத்துவ காரணங்களில் முதலிடத்தில் இதயம் தொடர்பான பாதிப்புகள் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது தான்.

அதே தருணத்தில் இளைய தலைமுறையினர் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை நடைமுறையால் இளம் வயதிலேயே இதய பாதிப்பு ஏற்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

அதிலும் இன்றைய இளைய தலைமுறையினர் உயிரியல் கடிகார சுழற்சிக்கு எதிராக இரவு நெடுநேரம் கண் விழித்து, சமூக வலைதள ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளை பார்வையிடுகிறார்கள். இதன் காரணமாகவே அவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படுகிறது என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

எம்முடைய இல்லங்களில் குடும்பத் தலைவிகள் மாலை நேரங்களில் ஆறு மணி அளவில் காணத்தொடங்கும் தொலைக்காட்சி தொடர்களை இரவு 9 அல்லது 10 மணி வரை தொடர்ச்சியாக காண்கிறார்கள்.

பெரும்பாலான நெடுந்தொடர்களில் குடும்ப உறவுகள் குறித்தும், சமூக உறவுகள் குறித்தும் நேர்நிலையான விடயங்களைப் பற்றியும், மகிழ்ச்சி அளிக்கும் விடயங்களை பற்றியும் பேசாமல்..., மனதை பாதிக்கும் எதிர்நிலையான விடயங்களையே, 'உணர்வு பூர்வம்' எனும் போர்வையில் வழங்குகிறார்கள்.

இதனால் எம்முடைய மூளை பகுதியில் மகிழ்ச்சிக்கான டோபமைன் எனும் ஹோர்மோன் சுரப்பது குறைந்து, உடல் ஆரோக்கியத்திற்கு எதிரான கார்டிசோல் எனும் ஹோர்மோன் சுரப்பது அதிகரிக்கிறது. இது உங்களின் ஆரோக்கியத்தையும் குறிப்பாக இதய ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதன் காரணமாக உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்பினால், முதலில் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்வையிடுவதையும், சமூக வலைதள பக்கங்களில் உலா வருவதையும் 'குறிப்பிட்ட நேரத்திற்கு' என ஒரு வரையறை செய்து, கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் உங்களுடைய மனம் பாதிக்கப்பட்டு மன ஆரோக்கியம் கெடும்.

இதன் காரணமாக ஏற்படும் நெஞ்சு வலி என்பது, மாரடைப்பிற்கான நெஞ்சு வலியுடன் ஒப்பிடாமல் பிரித்து அறிந்து கொண்டு, இதனை தவிர்க்க வேண்டும் என உளவியல் நிபுணர்களும், இதய சிகிச்சை நிபுணர்களும் பரிந்துரைக்கிறார்கள். மன அழுத்தம், மன பதற்றம், மன உளைச்சல், பயம் போன்றவற்றின் காரணமாக ஏற்படும் நெஞ்சுவலி என்பது நாளடைவில் பாரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

உடல் ஆரோக்கியத்திற்கு உணவின் மூலம் முக்கியத்துவம் அளிக்கும் நாம், மனம் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் நேரம் ஒதுக்கி, அதனுடைய ஆரோக்கியத்தையும் பேணி பராமரிக்க வேண்டும். இல்லையெனில் மன பாதிப்பின் காரணமாக உடல் ஆரோக்கியமும் குறிப்பாக இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து கொண்டு, வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

டொக்டர் வேணி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹைபர்டிராபிக் அப்ஸ்ட்ரக்டிவ் கார்டியோமயோபதி எனும் திடீர்...

2023-02-08 12:27:00
news-image

தொண்டையில் கிச்...கிச்.... தொந்தரவா.....?

2023-02-08 12:18:50
news-image

அம்ப்ளிக்கல் கிரானுலோமா எனப்படும் தொப்புள் கட்டி...

2023-02-07 15:36:13
news-image

குடல் எரிச்சல் பாதிப்பை ஃபுட்மாப் (FODMAP)...

2023-02-06 13:47:17
news-image

அயோட்டிக் டிஸெக்ஷன் எனப்படும் இதய தமனி...

2023-02-04 13:31:54
news-image

மூளை கட்டி பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2023-02-02 16:56:07
news-image

பிரபலமடைந்து வரும் யெயர்த்திங் தெரபி

2023-02-01 17:35:35
news-image

குழந்தைகளுக்கு குறட்டை வருவது ஏன்?

2023-02-01 11:51:33
news-image

இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் ஹீமோகுளோபின்...

2023-02-01 11:09:27
news-image

ஸ்கின் கிராப்டிங் எனப்படும் தோல் பொறுத்தும்...

2023-01-31 16:23:50
news-image

குழந்தைகளுக்கு ஏற்ற தேங்காய் எண்ணெய் தயாரிப்பு

2023-01-30 12:35:06
news-image

ஸ்லீப் பரலைஸ் எனும் உறக்க பக்கவாதப்...

2023-01-30 11:30:54