கல்லூரி காலத்தை நினைவூட்டும் 'எங்க ஹாஸ்டல்' வலைத்தள தொடர்

By Nanthini

25 Jan, 2023 | 10:29 AM
image

ந்தியாவில் அதிகளவிலான பார்வையாளர்களால் விரும்பி ரசித்து கொண்டாடப்பட்ட வலைத்தள தொடரான 'ஹொஸ்டல் டேஸ்' எனும் தொடரின் தமிழ் பதிப்பாக 'எங்க ஹாஸ்டல்' எனும் புதிய வலைத்தள தொடர் அமேசான் ப்ரைம் வீடியோவில் எதிர்வரும் ஜனவரி 27ஆம் திகதி முதல் வெளியாகிறது. 

‌இந்த தொடரில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் பற்றிய விபரக் குறிப்புகளை இத்தொடர் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

தி வைரல் ஃபீவர் என்னும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த தொடரை சதீஷ் சந்திரசேகர் இயக்கியிருக்கிறார். இந்த தொடரில் சச்சின் நாச்சியப்பன், அவினாஷ் ரமேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், சரண்யா ரவிச்சந்திரன், கௌதம் ராஜ், டிராவிட் செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பொறியியல் கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் தயாராகியிருக்கிறது. 

கனவுகளையும் நம்பிக்கைகளையும் சுமந்துகொண்டு, உற்சாகத்துடன் இளமை துள்ளும் பருவ வயதுடன் கல்லூரியின் விடுதிக்குள் காலடி எடுத்து வைக்கும் இளைஞர்களின் அந்த காலகட்ட வாழ்வியலை இந்தத் தொடர் சித்திரிக்கிறது. 

குறிப்பாக, விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களிடையே ஏற்படும் நட்பு, காதல், மோதல், சண்டை, தேர்வு, தேர்வு குறித்த தயாரிப்பு போன்றவற்றை மையப்படுத்தி இந்த தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதில் அவினாஷ் ரமேஷ் சித்தப்புவாகவும், சச்சின் நாச்சியப்பன் அஜய்யாகவும், சம்யுக்தா விஸ்வநாதன் 'அஹானா' எனும் வட இந்திய மாணவியாகவும், சரண்யா ரவிச்சந்திரன் 'ராஜா' எனும் அப்பாவி தமிழ்ப் பெண்ணாகவும், கௌதம் ராஜ் செந்திலாகவும், டிராவிட் செல்வம் 'தொழில் முனைவோர் பாண்டியன் எனும் ஜெய வீர பாண்டியனாகவும் நடித்திருக்கிறார்கள்.

அமேசான் ப்ரைம் வீடியோவின் வலைத்தள தொடர்களுக்கு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துவருவது அதிகரித்திருப்பதால், இளமை குறும்புடன் தயாராகியிருக்கும் 'எங்க ஹாஸ்டல்' எனும் புதிய வலைத்தள தொடருக்கும் பாரியளவில் வரவேற்பு கிடைக்கும் என அவதானிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்