இருமல் மருந்து உயிரிழப்புகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தல்

Published By: Digital Desk 3

25 Jan, 2023 | 10:26 AM
image

கடந்த ஆண்டு இருமல் மருந்துகளை பயன்படுத்தியதனால் நிகழ்ந்த குழந்தைகள் உயிரிழப்புகளுக்கு உடனடியாக நடவடிக்கை  எடுக்குமாறு  உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைக்கால் அதிகளவு இருந்ததால், அவற்றை கடந்த 4 மாதங்களில் அருந்திய குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர வைத்துள்ளது. 

இப்படி 7 நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 300 குழந்தைகளின் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. 

இந்தியாவில் அரியானாவை சேர்ந்த மெய்டன் பார்மசியூடிக்கல் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து குறித்து கடந்த அக்டோபர் மாதம் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நவம்பரில் இந்தோனேசிய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகள் மீதும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்தது. இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த தரம் குறைந்த  இருமல் மருந்து குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்தது. 

இந்த மருந்து குடித்து உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்நிலையில் தரம் குறைந்த இருமல் மருந்துகளை தயாரித்து அளித்த மருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளை உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13