தனது வீட்டிலிருந்து, அமெரிக்க அரசின் இரசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
2017 ஜனவரி முதல் 2021 ஜனவரி வரை ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்த போது, உப ஜனாதிபதியாக மைக் பென்ஸ் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இரகசிய ஆவணங்களாக வகைப்படுத்தப்பட்ட சொற்ப எண்ணிக்கையிலான ஆவணங்கள் தனது வீட்டிலிருந்து கடந்த வாரம் சட்டத்தரணி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக மைக் பென்ஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு தான் பதவியிலிருந்து விலகியபோது சொற்ப எண்ணிக்கையான ஆவணங்கள் கவனக்குறைவினால் பெட்டியில் வைக்கப்பட்டு, இண்டியானா மாநிலத்திலுள்ள தனது வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் தேசிய ஆவணக்காப்பகத்துக்கு தனது சட்டத்தரணி அறிவித்துள்ளார் என மைக் பென்ஸ் தெரிவித்தள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வீடு மற்றும் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் வீடு மற்றும் முன்னர் பிரத்தியேக அலுவலகம் ஆகியவற்றிலிருந்து இரகசிய ஆவணங்கள் அண்மைக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மைக் பென்ஸின் வீட்டிலிருந்தும் இத்தகைய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM