உலக கராத்தே சம்மேளனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான புதிய தொழில்நுட்பம் மற்றும் போட்டி விதிமுறைகள் பற்றிய கருத்தரங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 22) சம்மாந்துறை உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இலங்கை கராத்தே தோ கிழக்கு மாகாண சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் முஹம்மது இக்பால் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட கராத்தே போதனாசிரியர்கள், நடுவர்கள், மத்தியஸ்தர்கள், புதிய நடுவர் மற்றும் மத்தியஸ்தர் பரீட்சைக்குத் தோற்றவுள்ள கறுப்புப்பட்டி மாணவர்கள் மாத்திரம் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் அதிதியாகவும் வளவாளராகவும் தென்னாசிய கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழாமின் தவிசாளர் ஷிஹான் ஆர்.ஜே.அலெக்ஸாண்டர் கலந்துகொண்டு 2023ஆம் ஆண்டுக்காக உலக கராத்தே சம்மேளனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பம் மற்றும் போட்டி விதிமுறைகள் பற்றிய தெளிவான விளக்கங்களை வழங்கினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM