2022 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் இருபது 20 அணியில் இலங்கை வீராங்கனை இனோக்கா

By Vishnu

24 Jan, 2023 | 09:06 PM
image

(என். வீ. ஏ.)

2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் இருபது 20 அணியில் இலங்கையின் சுழல்பந்துவீச்சாளரும் ஒருநாள் அணியின் முன்னாள் தலைவியுமான இனோக்கா ரணவீர இடம்பெறுகிறார்.

ஆடவருக்கான ஐசிசி இருபது 20 அணியில் வனிந்து ஹசரங்க ஏற்கனவே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூரில் நடைபெற்ற பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான மகளிர் இருபது 20 கிரிக்கெட் தகுதிகாண் போட்டியில் விளையாடிய இனோக்கா ரணவீர, பின்னர் பொதுநலாவாய விளையாட்டு விழாவுக்கான இலங்கை அணியிலும் இடம்பெற்றார்.

கடந்த வருடம் 19 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இனோக்கா மொத்தமாக 27 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

மேலும் மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 77 வீக்கெட்களை வீழ்த்தியுள்ள இனோக்கா ரணவீர, அதிக விக்கெட்களை வீழ்த்திய இலங்கை வீராங்கனைகளில் ஷஷிகலா சிறிவர்தனவுக்கு அடுத்ததாக 2ஆம் இடத்தில் உள்ளார்.

2022க்கான ஐசிசி மகளிர் இருபது 20 கிரிக்கெட் அணியில் இந்திய வீராங்கனைகள் நால்வரும்    அவுஸ்திரேலிய வீராங்கனைகள் மூவரும் இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒரு வீராங்கனையும் இடம்பெறுகின்றனர்.

ஐசிசி மகளிர் இருபது 20 அணி

ஸ்ம்ரித்தி மந்தானா (இந்தியா), பெத் மூனி (அவுஸ்திரேலியா), சொபி டிவைன் (தலைவி - நியூஸிலாந்து), ஆஷ் கார்ட்னர் (அவுஸ்திரேலியா), தஹிலா மெக்ரா (அவுஸ்திரேலியா), நிதா தார் (பாகிஸ்தான்), தீப்தி ஷர்மா (இந்தியா), ரிச்சா கோஷ் (இந்தியா), சொஃபி எக்ளஸ்டோன் (இங்கிலாந்து), இனோக்கா ரணவீர (இலங்கை), ரேணுகா சிங் (இந்தியா)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துருக்கி பூகம்பத்தில் கால்பந்தாட்ட வீரர் பலி

2023-02-08 11:23:55
news-image

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டிலிருந்து ஆரோன்...

2023-02-07 15:23:16
news-image

இருபதுக்கு 20 உலகக் கிண்ண பயிற்சிப்...

2023-02-07 15:35:37
news-image

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்துக்கு  சவூதி...

2023-02-07 14:42:05
news-image

இரட்டைச் சதம் விளாசிய சந்தர்போலின் மகன்...

2023-02-07 15:01:00
news-image

மேற்கிந்தியத் தீவுகளுக்கான 33 வருட ஆரம்ப...

2023-02-07 14:07:13
news-image

முதல் சுற்றுடன் வெளியேறினார் சானியா

2023-02-07 11:50:49
news-image

6 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்ட...

2023-02-07 11:25:04
news-image

அனைவருக்கும் ஆசிய விளையாட்டு விழா என்பதை...

2023-02-07 09:59:15
news-image

மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட இறுதியில் 76ers, ஓல்ட்...

2023-02-06 21:15:15
news-image

சர்வதேச போட்டிகளில் நடுநிலை வீரர்களாக  பங்குபற்ற...

2023-02-06 16:46:25
news-image

பங்கபந்து கபடி சம்பியன்ஷிப் தொடரில் தமிழ்...

2023-02-06 14:53:21