அபிவிருத்தி செய்தது யார் ? சீரழித்தது யார்? தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள் - பொதுஜன பெரமுன மக்களிடம் கோரிக்கை

Published By: Vishnu

24 Jan, 2023 | 09:07 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மாறுப்பட்ட சின்னத்தில்; போட்டியிடும். யார் நாட்டுக்கு சேவையாற்றினார்கள்,யார் நாட்டை சீரழித்தார்கள் என்பதை இருமுறை சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனநாயகம் மற்றும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து செயற்படுகிறது,உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் சூழ்ச்சி செய்கிறது,அதற்கு பொர்துஜன பெரமுன ஆதரவு வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் போலியான செய்தி வெளியாகின.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல்,வேட்பு மனுக்களை சமர்ப்பித்தல் நடவடிக்கைகளில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மும்முரமாக செயற்பட்டது.254 உள்ளுர் அதிகார சபைகளில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுஜன பெரமுன மாறுப்பட்ட பொதுச் சின்னத்தில் போட்டியிடும்.ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து கூட்டணியாக ஒருசில உள்ளுர் அதிகார சபைகளில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்களிக்கும் போது மக்கள் யார் நாட்டுக்கு சேவையாற்றினார்கள்,யார் நாட்டை சீரழித்தார்கள் என்பதை ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.ஆகவே மக்களுக்கு மாற்று வழியேதும் கிடையாது.

ஸ்ரீ லஙகா பொதுஜன பெரமுன மற்றும் ராஜபக்ஷர்களுக் எதிராக சமூக வலைத்தளங்களில் திட்டமிட்ட வகையில் சேறுபூசல்கள் முன்னெடுக்கப்படுகின்றன, இருப்பினும் நாட்டு மக்கள் மத்தியில் பொதுஜன பெரமுனவிற்கு நல்ல நிலைப்பாடு காணப்படுகிறது, இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெறும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08