எயார் இந்தியா நிறுவனத்துக்கு 10 இலட்சம் ரூபா அபராதம் 

By Sethu

24 Jan, 2023 | 04:52 PM
image

கடந்த 6 ஆம் திகதி பாரிஸிலிருந்து டெல்லி நோக்கி பறந்துகொண்டிருந்த விமானத்தில் இடம்பெற்ற இரு சம்பவங்கள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கத் தவறியதால் எயார் இந்தியா நிறுவனத்துக்கு இந்திய சிவில் விமான போக்குவரத்து பணியகம் இன்று 10 இலட்சம் இந்திய ரூபா அபராதம் விதித்துள்ளது.

எயார் இந்தியாவின் எஐ-142 விமானத்தில் இரு சம்பவங்கள் இடம்பெற்றாக இந்திய சிவில் விமான போக்குவரத்து பணியகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. 

அவ்விமானத்தில் பயணி ஒருவர், கழிவறையில் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தமை தெரியவந்தது. ஊழியர்களின் உத்தரவின்படி செயற்படுவதற்கு அவர் மறுத்தார்.

மற்றொரு பயணி, வெற்று ஆசனமொன்றிலும் பெண் பயணி ஒருவரின் போர்வையிலும் சிறுநீர் கழித்தார்.

மேற்படி இரு சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கத் தவறியமைக்காக எயார் இந்தியாவுக்கு 10 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் நியூயோர்க் - டெல்லி விமானத்தில் வயதான பெண்ணொருவர் மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்தமை தொடர்பில் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கத் தவறியமைக்காக எயார் இந்தியாவுக்கு 4 நாட்களுக்கு முன் 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆயிரத்தை நெருங்குகின்றது

2023-02-08 17:02:11
news-image

என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் நான் உங்கள்...

2023-02-08 14:56:01
news-image

பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன்...

2023-02-08 12:00:40
news-image

பூகம்பம் தாக்கிய பகுதிகளில் வசித்த நான்கு...

2023-02-08 12:03:57
news-image

துருக்கி பூகம்பத்தில் சிக்கிய பூனை மீட்பு

2023-02-08 12:18:12
news-image

துருக்கி, சிரியாவில் பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை...

2023-02-08 10:22:35
news-image

பூகம்பத்தைத் தொடர்ந்து துருக்கி துறைமுகத்தில் தீ

2023-02-08 09:32:08
news-image

பூகம்பம் - தொப்புள்கொடி துண்டிக்கப்படாத நிலையில்...

2023-02-08 06:11:56
news-image

வியட்நாம் யுத்தத்தில் தென் கொரிய படையினரின்...

2023-02-07 17:56:14
news-image

பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள மக்கள் குரல்செய்திகளை...

2023-02-07 20:59:10
news-image

அதானிக்கு ஏற்ற விதத்தில் இந்தியாவின் வெளிவிவகார...

2023-02-07 16:22:30
news-image

அமெரிக்க லொத்தர் சீட்டிழுப்பில் 27,605 கோடி ...

2023-02-07 16:08:31