(எம்.எப்.எம்.பஸீர்)
மின் கட்டணத்தை அதிகரிக்க, இலங்கை மின்சார சபையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அமைச்சர்வை விடுத்துள்ளதாக கூறப்படும் உத்தரவை இரத்து செய்து எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மின்சார பாவனையாளர்கல் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளன.
இலங்கை மின்சார சபை, மின்சாரத் துறை அமைச்சர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் உள்ளிட்டோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும், அதனை இலங்கை மின்சார சபையுடன் இணைந்து மேற்கொள்ள பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அமைச்சர்வை உத்தரவிட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுயாதீன ஆணைக்குழு என மனுவில் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், அவ்வாறான உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு அமைச்சரவைக்கு அதிகாரம் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி மின்கட்டண உயர்வு தொடர்பாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் செல்லுபடியற்றது என உத்தரவு பிறப்பிக்குமாறு குறித்த மனுவில் மனுதாரர்கள் சார்பில் கோரப்பட்டுள்ளது.
இதனிடையே, அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் யோசனையை நடைமுறைப்படுத்த போவதில்லை எனவும், அது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்ப்ட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் மேற்படி ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கதெரிவித்தார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு மேலதிகமாக, சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளையும் ஆணைக்குழு பெற்றுக்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM