தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் - கடந்த டிசம்பரில் பணவீக்கம் 59.2 சதவீதமாக வீழ்ச்சி

By Digital Desk 5

24 Jan, 2023 | 08:55 PM
image

(நா.தனுஜா)

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த நவம்பர் மாதம் 65 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது கடந்த டிசம்பர் மாதத்தில் 59.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் உணவுப்பொருட்களின் விலைகள் 0.2 சதவீதத்தினால் குறைவடைந்ததன் விளைவாக ஏற்பட்ட தாக்கங்களை உணவல்லாப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட 0.21 சதவீத அதிகரிப்பு எதிரீடு செய்தமையே இதற்குக் காரணமாக அமைந்ததென சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மத்திய வங்கி, கடந்த நவம்பர் மாதம் 69.8 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப்பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 59.3 சதவீதமாகவும், கடந்த நவம்பர் மாதம் 60.4 சதவீதமாகக் காணப்பட்ட உணவல்லாப்பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 59 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளது.

அதேவேளை இக்காலப்பகுதியில் பெரிய வெங்காயம், கருவாடு, சீனி, காய்கறி மற்றும் அரிசி ஆகிய உணவுப்பொருட்களின் விலைகள் குறிப்பிடத்தக்களவால் வீழ்ச்சியடைந்த போதிலும், தேங்காய், பால்மா மற்றும் உடன் பழங்கள் என்பவற்றின் விலைகள் அதிகரித்ததாகவும், ஆடை, காலணி மற்றும் நானாவிதப்பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்களில் அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டதாகவும் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணில் ஏற்படக்கூடிய மாதாந்த மாற்றம் கடந்த டிசம்பர் மாதம் 0.01 சதவீதமாகப் பதிவானதுடன், கடந்த நவம்பரில் 46.7 சதவீதமாகப் பதிவான ஆண்டுக்கான சராசரிப்பணவீக்கம் டிசம்பரில் 50.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் கொள்கை உரை பயனற்றது -...

2023-02-08 15:56:23
news-image

வரிக் கொள்கை வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் -...

2023-02-08 14:36:56
news-image

எளிமையான முறையில் இடம்பெற்ற 9 ஆவது...

2023-02-08 16:05:15
news-image

அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு...

2023-02-08 14:34:26
news-image

மலையகப் பிரதிநிதிகளுடன் பேசப்போவதாக ரணில் சொல்வதை...

2023-02-08 16:52:58
news-image

அத்தியாவசியமான அரச செலவினங்களுக்கு மாத்திரமே நிதி...

2023-02-08 16:26:15
news-image

வரி திருத்த சட்டத்தை அரசாங்கம் மீளப்பெற...

2023-02-08 15:54:09
news-image

இனப்பிரச்சனைக்கான தீர்வு பெரும்பான்மை சிங்கள மக்களின்...

2023-02-08 15:18:23
news-image

எதிர்காலத்தில் இ.தொ.கா. மக்களுக்கு தேவையான விடயங்களை...

2023-02-08 17:02:02
news-image

அக்கிராசன உரை புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து...

2023-02-08 16:48:01
news-image

புதிய வரி அறவீட்டுக்கு எதிராக தொழில்...

2023-02-08 16:38:26
news-image

மக்களுக்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல...

2023-02-08 16:36:18