சட்டவிரோத சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, இந்திய பிரஜைகள் ஐவரையும்  எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சட்டவிரோத சிறுநீரக வர்த்தகம் தொடர்பிலான விசாரணை இன்று (22) நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் எஸ்.எஸ்.மாபி பிறப்பித்துள்ளார்.

குறித்த ஐவரும் மிஹிரியான தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போது தப்பிச்சென்று மீண்டும் கைதுசெய்யப்பட்டவர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தப்பிச்சென்ற மேலும் இருவர் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.