மக்களின் நிலைப்பாட்டை தேர்தல் மூலம் அறியலாம் - பேராசிரியர் சரித ஹேரத்

Published By: Digital Desk 5

24 Jan, 2023 | 05:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மக்களின் அரசியல் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பதை உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாக விளங்கிக் கொள்ள முடியும்.

தேர்தலில் போட்டியிட தயாரில்லை என்றால் ஐக்கிய தேசியக் கட்சியும்,பொதுஜன பெரமுனவும் தேர்தலில் இருந்து தாராளமாக விளங்கிக் கொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (24) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு  தீர்மானித்துள்ள நிலையில் தேர்தலை பிற்போட ஏதேனும் புதிய வழிமுறை இல்லையா என்பதை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.தேர்தல் தொடரபில் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது.

தேர்தல் இல்லாத நாட்டில் ஜனநாயகம் இல்லை,நாட்டு மக்களின் அரசியல் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பதை தேர்தல் ஊடாகவே விளங்கிக்கொள்ள முடியும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு மக்களாணை கிடையாது.

மக்களாணை இல்லாத அரசாங்கதத்திற்கு சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது,மக்களின் அரசியல் நிலைப்பாடு எத்தன்மையில் உள்ளது என்பதை இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாக  சர்வதேசம் விளங்கிக் கொள்ளும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் தேர்தலுக்கு தயார் இல்லை.பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்கு தயார் இல்லை என்றால் அவர்கள் தேர்தலில் இருந்து தாராளமாக விளங்கிக் கொள்ளலாம் .

69 இலட்சம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மக்களால் பதவி நீக்கப்பட்டார்,மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.மக்களாணை தொடர்பில் பாரிய சிக்கல் நிலை காணப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40