(எம்.மனோசித்ரா)
அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை வழங்குவதில் ஓரிரு தினங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னரே அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஏப்ரல் மாதமளவில் இந்த பிரச்சினை நிறைவடையும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த சம்பளக் கொடுப்பனவை குறித்த தினத்தில் செலுத்துவதற்கும், பதவிநிலை உத்தியோகத்தர்களின் சம்பளத்தை சில தினங்கள் தாமதமாக செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதற்காக திறைசேரியால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இந்நிலையில் பதவி நிலையற்ற அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் இம்மாதம் 25 ஆம் திகதி வழங்கப்படும் என்றும் , பதவி நிலை அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளம் 26 ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த தினத்தில் வழங்கப்படும் என்றும் திங்கட்கிழமை (23) நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.
இது குறித்து நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
'பதவி நிலை மற்றும் பதவி நிலையற்ற அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் , சமூர்த்தி கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தற்காலிகமானதேயாகும். முதற்காலாண்டில் வரி வருமானத்தின் மூலம் திறைசேரியின் இருப்பு அதிகரிக்கும். எனவே ஏப்ரல் மாதமளவில் இந்த பிரச்சினை நிறைவடையும்' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM