(க.கமலநாதன்)

புதிய அரசிலைமப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போர்வையில் நல்லாட்சி  அரசாங்கம் தாம் செய்கின்ற பிழையான விடயங்களை மூடி மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சாட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்  அலுவலகத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  உத்தியோகபூர்வ  முகப்புத்தக பக்கத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறப்பு அமைச்சு, அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு வெளிநாட்டு நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளமை போன்ற விடயங்களுக்கு நாம் எதிர்ப்பினை வெளிக்காட்டி வருகின்றோம்

அபிவிருத்தி என்ற பேரில்  நாட்டை விற்பனை செய்ய முடியாது. இவ்வாறான விடயங்களை நாம் கண்டிக்கின்ற போது எம்மை முடக்க அரசாங்கம் முயற்சிக்கின்றனர்.

இவ்வாறான விடயங்களை நாம் வெளிப்படுத்தி வருகின்ற போது புதிய அரசியலமைப்பு உருவாக்க செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி இந்த அரசாங்கம் தாம்மால் விடப்படுகின்ற சகல தவறுகளையும் மறைத்துவருகின்றது என்றார்.