இந்தியாவுடனான தொடரை ஏற்கனவே பறிகொடுத்துள்ள நியூஸிலாந்து கடைசிப் போட்டியில் ஜமாய்குமா?

By Digital Desk 5

24 Jan, 2023 | 01:38 PM
image

(என்.வீ.ஏ.)

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டி இந்தூர் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிகளை ஈட்டி தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ள இந்தியா, தொடரை முழுமையாக வெற்றிகொள்ளும் குறிக்கோளுடன் இன்றைய போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேவேளை, ஓர் ஆறுதல் வெற்றியையாவது ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் நியூஸிலாந்து களம் இறங்கவுள்ளது.

ஆரம்பப் போட்டியில் இரண்டு அணிகளும் அதிரடி ஆட்டதை வெளிப்படுத்த ஒட்டுமொத்தமாக 686 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது. அதில் இந்தியா சார்பாக ஷுப்மான் கில் 208 ஓட்டங்களையும் நியூஸிலாந்து சார்பாக மைக்கல் ப்றேஸ்வெல் 140 ஓட்டங்களையும் குவித்து அசத்தியிருந்தனர்.

மிகவும் விறுவிறுப்பை ஏற்படுத்திய அப் போட்டியில் இந்தியா 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.

ஆனால், 54.4 ஓவர்களில் நிறைவடைந்த இரண்டாவது போட்டியிலோ ஒட்டுமொத்தமாக 219 ஓட்டங்கள் மாத்திரமே பெறப்பட இந்தியா 8 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றிருந்தது.

அப் போட்டியில் மிகவும் மோசமாக துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

எவ்வாறாயினும் துடுப்பாட்டத்திற்கு சாதகமான இந்தூர் ஆடுகளத்தில் கணிசமான மொத்த ஓட்டங்கள் பெறப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மைதானத்தில் கடைசியாக கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 6 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைக் குவித்தது. ஆனால், இந்தியா 5 விக்கெட்களை இழந்து 294 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆனால், கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா 3 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களைக் குவிக்க, இந்தியா சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியிருந்தது.

இந்தப் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்கள் செலுத்திய ஆதிக்கத்தை நோக்கும்போது, இன்றைய போட்டியிலும் கணிசமான மொத்த ஓட்டங்கள் குவிக்கப்பட்டு ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.

வழமையான அணித் தலைவர் கேன் வில்லியம்சன், வேகப்பந்துவீச்சாளர்களான டிம் சௌதீ, ட்ரென்ட் போல்ட் ஆகியோர் அணியில் இடம்பெறாதது நியூஸிலாந்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, அண்மையில் இல்லற வாழ்க்கையில் இணைந்த கே. எல். ராகுல் ஒரு போட்டி விடுகைக்குப் பின்னர் மீண்டும் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இரண்டு போட்டிகளில் சகலதுறைகளிலும் நியூஸிலாந்தைவிட சிறப்பாக செயல்பட்ட இந்தியா இன்றைய போட்டியிலும் திறமையை வெளிப்படுத்தி தொடரை முழுமையாகக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணிகள்

இந்தியா: ரொஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, இஷான் கிஷான் அல்லது கே. எல். ராகுல், சூரியகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, வொஷிங்டன் சுந்தர், ஷர்துல் தக்கூர், குல்தீப் யாதவ், மொஹமத் ஷமி அல்லது மொஹமத் சிராஜ் அல்லது உம்ரன் மாலிக்.

நியூஸிலாந்து: பின் அலன், டெவன் கொன்வோய், ஹென்றி நிக்கல்ஸ் அல்லது மார்க் செப்மன், டெரில் மிச்செல், டொம் லெதம் (தலைவர்), க்லென் பிலிப்ஸ், மைக்கல் ப்றேஸ்வெல், மிச்செல் சென்ட்னர், டக் ப்றேஸ்வெல் அல்லது ஹென்றி சிப்லி அல்லது ஜேக்கப் டஃபி, ப்ளயார் டிக்னர், லொக்கி பேர்கசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறுதிக் கட்டத்தில் இலங்கை ஏ ஆதிக்கம்...

2023-02-03 19:50:53
news-image

சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்டத்திற்கு டயலொக் உந்துசக்தி

2023-02-03 16:47:50
news-image

ஐ.சி.சி. சுப்பர் ஸ்டார்கள் குழுவில் இலங்கையின்...

2023-02-03 14:45:06
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் ரஷ்யர்கள் பங்குபற்றுவதை...

2023-02-03 13:32:56
news-image

மதுஷான் ஆட்டமிழக்காமல் அபார இரட்டைச் சதம்...

2023-02-03 10:41:11
news-image

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சுசந்திகா மகளிர்...

2023-02-03 09:44:25
news-image

ஆர்ச்சர் அபார பந்துவீச்சு, இங்கிலாந்துக்கு ஆறுதல்...

2023-02-02 10:31:01
news-image

55 வயதில் போர்த்துகல் கழகத்தில் விளையாட...

2023-02-02 10:04:53
news-image

துடுப்பாட்டத்தில் ஷுப்மான், பந்துவீச்சில் பாண்டியா அசத்தல்...

2023-02-02 09:44:41
news-image

மகளிர் உலகக் கிண்ண இலங்கை குழாத்தில்...

2023-02-01 18:31:57
news-image

வார இறுதியில் இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம்

2023-02-01 18:36:17
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் அதிகாரி...

2023-02-01 14:38:17