அரச தொழிலுக்காக 3 ஆவது பிள்ளையை கால்வாயில் எறிந்து கொன்ற நபர் கைது: ராஜஸ்தானில் சம்பவம்

Published By: Sethu

24 Jan, 2023 | 12:17 PM
image

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர், அரசாங்க வேலையை தக்க வைத்துக்கொள்வதற்காக, 6 மாத குழந்தையை கால்வாயில் எறிந்து கொலை செய்துள்ளார். 

இந்நபரையும் அவரின் மனைவியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

36 வயதான ஜவஹர்லால் மேக்வால், கீதா தேவி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளார். 

மேற்படி பெண் குழந்தை இத்தம்பதியின் 3 ஆவது பிள்ளையாகும். 

ராஜஸ்தான் மாநில அரசாங்க கொள்கையின்படி, அரச ஊழியர்கள் 2 பிள்ளைகளை மாத்திரமே பெற முடியும். 3 ஆவது பிள்ளை பிறந்தபின் அரச பணியிலிருந்து கட்டாயமாக ஓய்வு பெற வேண்டும்.

இந்நிலையில், தனக்கு ஏற்கெனவே இரு பிள்ளைகள் உள்ள நிலையில், 3 ஆவது குழந்தை பிறந்ததால் அரசாங்கத் தொழிலை இழக்க நேரிடும் என ஜவஹர்லால் மேக்வால் அச்சமடைந்தாராம். 

இதனால், அவர் மேற்படி பெண் குழந்தையை கால்வாயில் வீசி கொலை செய்துள்ளார் என குறு;றம் சுமத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பில்கானேர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .

இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 மற்றும் 120பி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என பில்கானேர் அத்தியட்சகர் யோகேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருக்கு 1...

2024-10-03 15:35:20
news-image

லெபனானில் இலங்கையர் எவரும் இதுவரை மோசமான...

2024-10-03 15:01:24
news-image

வியட்நாம் மிருகக்காட்சி சாலையில் பறவை காய்ச்சல்...

2024-10-03 14:22:09
news-image

ஜப்பான் விமான நிலையத்தில் புதைக்கப்பட்ட குண்டு...

2024-10-03 09:39:09
news-image

பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவநிலையம்...

2024-10-03 06:01:40
news-image

லெபனான் மோதலில் எட்டு இஸ்ரேலிய படையினர்...

2024-10-02 20:33:33
news-image

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இஸ்ரேலிற்குள்...

2024-10-02 17:11:01
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொண்டால் அதன்...

2024-10-02 10:41:05
news-image

இஸ்ரேலின் புலனாய்வு பிரிவின் தலைமையகம் -...

2024-10-02 08:09:28
news-image

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் -...

2024-10-02 06:40:53
news-image

இஸ்ரேலிய தலைநகரில் துப்பாக்கி தாக்குதல் -...

2024-10-02 06:17:03
news-image

இஸ்ரேல் மீது ஈரான் தொடர் ஏவுகணை...

2024-10-02 05:54:56