(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் 23 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார்-யாழ்ப்பாணம் வீதியியில் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான்.
குறித்த சிறுவன் வீதியைக் கடப்பதற்கு முயற்சித்த போது அம்புலன்ஸ் வாகனத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த சிறுவன் 9 வயதுடைய பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனாவான்.
அ ம்புலன்ஸ் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, தெரணியகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லெல்ல எந்திரியன்வல குறுக்கு சந்தையில் தெமத பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 33 வயதுடைய கல்லேல்லகாம, தெரணியகல பிரதேசத்தைச் சேர்ந்த வராவார் இதேவேளை, மாத்தறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ராகுல சந்தியில் வீதியில் சென்றுக்கொண்டிருந்த பாதசாரி ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது காயமடைந்த நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 87 வயதுடைய காலிதாச வீதி, மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த வராவார் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM