தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான நியமனங்கள் இன்று (22) ஜனாதிபதியால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர், நீதிபதி ஏ.டபுள்யூ.ஏ.சலாம் மற்றும் கலாநிதி செல்வி திருச்சந்திரன் ஆகியோருக்கே குறித்த நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.