ஜேர்மனியின் லெப்பர்ட் ரக இராணுவத் தாங்கிகளை உக்ரேனுக்கு ஏற்றுமதி செய்வதற்கு போலந்து விரும்பினால், அதற்கு ஜேர்மனி அனுமதியளிக்கும் என ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் அனாலீனா பேர்பொக் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படையெடுப்பை வெற்றி கொள்வதற்காக ஜேர்மனியின் லெப்பர்ட்-2 ரக இராணுவத் தாங்கிகளை வழங்குமாறு மேற்குலக நாடுகளிடம் உக்ேரன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலேன்ஸ்கி கோரியுள்ளார்.
இத்தாங்கிகளை நேரடியாக உக்ரேனுக்கு வழங்க ஜேர்மனி தயங்கி வருகிறது. ஜேர்மனியின் ஏற்றுமதி சட்டங்களின்படி, ஜேர்மனியிடம் தாங்கிகளை வாங்கிய நாடுகள் அவற்றை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது.
இந்நிலையில், ஜேர்மனி அனுமதி வழங்கினால் 14 லெப்பர்ட்-2 தாங்கிகளை உக்ரேனுக்கு வழங்க தான் தயார் என போலந்து தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜேர்மனின் வெளிவிவகார அமைச்சர் அனா லீனா பேர்பொக் நேற்றுமுன்தினம் கூறுகையில், இத்தாங்கிகளை உக்ரேனுக்கு அனுப்புவதற்கு போலந்து விரும்பினால் அதற்கு ஜேர்மனி தடையாக இருக்காது எனவும், போலந்து இன்னும் இத்தகைய கோரிக்கையை விடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM