சரத்குமார் - கௌதம் கார்த்திக் இணையும் 'கிரிமினல்'

By Digital Desk 5

24 Jan, 2023 | 10:31 AM
image

'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார்- 'இளைய நவரச நாயகன்' கௌதம் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கிரிமினல்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் தட்சிணாமூர்த்தி ராமர் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'கிரிமினல்'. இதில் கௌதம் கார்த்திக், ஆர் சரத்குமார் இணைந்து கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கும் நடிகை மற்றும் ஏனைய நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை பார்ஸா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. ஆர். மீனாட்சி சுந்தரம் மற்றும் ஐபி கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு கௌதம் கார்த்திக் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் படம் என்பதாலும், முதன்முதலாக அவர் சரத்குமாருடன் இணைந்து நடிப்பதாலும், 'கிரிமினல்' என தலைப்பிடப்பட்டிருப்பதாலும், இதற்கான எதிர்பார்ப்பு தொடக்க நிலையிலேயே ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்