வசூலில் சாதனை படைத்த 'வாரிசு'

By Digital Desk 5

24 Jan, 2023 | 10:30 AM
image

தமிழ் திரையுலகின் 'பொக்ஸ் ஓபிஸ்  சக்கரவர்த்தி' என்பதை தளபதி விஜய் மீண்டும் ஒருமுறை 'வாரிசு' படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் என திரையுலக வணிகர்கள் உற்சாகத்துடன் தெரிவிக்கிறார்கள். ஜனவரி 11ம் திகதியன்று உலகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட பட மாளிகையில் வெளியான 'வாரிசு' திரைப்படம், வெளியிடப்பட்ட 11 நாட்களில் இந்திய மதிப்பில் 250 கோடி ரூபாயை வசூலித்து புதிய சாதனையை படைத்திருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.

தெலுங்கின் முன்னணி இயக்குநரான வம்சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் குடும்ப உறவுகளை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருந்தது. கலவையான விமர்சனங்கள் வெளியாகி இருந்த போதும், பொங்கல் விடுமுறை திகதிகளில் 'வாரிசு' படத்திற்கு ரசிகர்கள் அளித்த பேராதரவு தற்போதும் தொடர்கிறது பட மாளிகை அதிபர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதனிடையே விஜய் நடித்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டங்கள் சென்னை, ஹைதராபாத் போன்ற மாநகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதும், இதில் விஜய் பங்கு பற்றி படக்குழுவினரின் விருப்பத்தை நிறைவேற்றி வருகிறார் என்பதும், இதன் காரணமாக விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படம் எதிர்பார்த்த வசூலை இன்னும் எட்டவில்லை என்பது தெரிய வருவதாக திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்